மறைந்த முதல்வர் ஜெயலலிதா வீட்டில் 1991 முதல் 1996 ஆம் ஆண்டு வரை சமையல் காரராக இருந்தவர் பஞ்சவர்ணம்,

இவருக்கு தற்போது வயது 80, இவரது மகன் முருகேசனை மறைந்த முதல்வர் ஜெயலலிதா செய்தி மக்கள் தொடர்புத்துறை உதவி இயக்குனராக நியமித்துள்ளார்.

சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து முருகேசனை வெளியே அழைத்த மர்ம கும்பல் கத்தியால் குத்த முயன்றுள்ளது.

இதை பார்த்த பஞ்சவர்ணம் அதை தடுக்க முற்பட்டபோது அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்ததும் அந்த கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

முருகேசன் அதிகாரியாக இருந்தும் சைதாப்பேட்டை போலிசார் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் முருகேசன் உதவி கமிஷனரிடம் இது குறித்து புகார் அளித்துள்ளார்.

மறைந்த முதல்வரால் நியமிக்கப்பட்ட அதிகாரியின் புகாரை கூட காவல் துறையினர் கண்டு கொள்ளவில்லை என்றால் சாதாரண பொதுமக்களின் நிலை என்ன என்பது பொதுமக்களின் கேள்வியாக உள்ளது.

ஏற்கனவே மறைந்த முதல்வரால் நியமிக்கப்பட்ட பெண் அதிகாரி ஒருவர் அமைச்சரால் மிரட்டப்பட்ட நிலையில் தற்போது அதே பாணியில் மற்றுமொரு சம்பவம் நடைபெற்றுள்ளதும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.