Connect with us
Cinemapettai

Cinemapettai

அச்சு அசல் புரட்சித்தலைவியாக மாறிய கங்கனா ரனாவத்.. நினைவு நாளில், அம்மாவை கண்முன் நிறுத்திய ‘தலைவி’ புகைப்படங்கள்!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அச்சு அசல் புரட்சித்தலைவியாக மாறிய கங்கனா ரனாவத்.. நினைவு நாளில், அம்மாவை கண்முன் நிறுத்திய ‘தலைவி’ புகைப்படங்கள்!

தமிழகத்தின் அரசியலில் ஜாம்பவானாக விளங்கிய முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவர் என்ற பெருமைக்குரியவர் தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நலக்குறைவால் டிசம்பர் 5ஆம் தேதியன்று உயிரிழந்ததால், அவருக்கு இன்று 4-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

எனவே இன்றைய தினத்தில் ஜெயலலிதா அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் இடம்பெறுள்ள புதிய புகைப்படங்களை, இந்த படத்தில் ஜெயலலிதாவின் கேரக்டரில் நடித்திருக்கும் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பதிவிட்டு ஜெயலலிதாவை நினைவு கூர்ந்துள்ளார்.

எனவே 6 முறை தமிழகத்தில் முதலமைச்சராக தமிழகத்தில் வலம் வந்த இரும்பு பெண்மணியான ஜெயலலிதாவின் ‘தலைவி’ படத்தை இயக்குனர் ஏஎல் விஜய் இயக்கி வருகிறார்.மேலும் இந்த படத்தில் எம்ஜிஆர் வேடத்தில் நடிகர் அரவிந்த்சாமி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள தலைவி படத்தின் புகைப்படங்கள் அனைத்தும் ஜெயலலிதாவின் ஆரம்பகால அரசியல் வாழ்க்கையை எடுத்துச் சொல்லும் விதமாக அமைந்துள்ளது.அதாவது இந்த படம் இன்னும் ஒரு சில வாரங்களில் முடிவடைந்துவிடும் என்று கங்கனா ரனாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் இன்று ஜெயலலிதாவின் கெட்டப்பில், கங்கனா ரனாவத் ஜெயலலிதாவின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியுள்ளார்.

kangana-cinemapettai

kangana-cinemapettai

ஏற்கனவே இயக்குனர் கௌதம் மேனன் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ரம்யா கிருஷ்ணனை வைத்து ‘குயின்’ என்ற வெப் சீரியலை வெளியிட்டு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஏஎல் விஜய்யின் ‘தலைவி’ படத்திற்கும் பெரும் வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர்.

thalaivi-kangana

thalaivi-kangana

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top