Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அரசியல் பேசாத ஒரே 90ஸ் ஹீரோ.. மனைவியுடன் சேர்த்து ஜெயலலிதாவை வியந்து பார்க்க வைத்த தருணம்

வெளிப்படையான பேச்சால் ஜெயலலிதாவை வியக்க வைத்த ஒரே நடிகர்.

Jayalalitha

Actress Jayalalitha: அரசியலிலும் சினிமாவிலும் தனி ஆதிக்கம் செலுத்திய நடிகை தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ. ஜெயலலிதா. இவர் பெரும்பாலும் யாரையும் அவ்வளவு சீக்கிரமாக நம்பி விடமாட்டார். அதிலும் ஜெயலலிதா சினிமாவை விட்டு ஒதுங்கிய, முழு நேர அரசியல்வாதியாக மாறிய சமயத்தில் ஒரு நடிகரின் செயல் அவரை வியக்க வைத்திருக்கிறது.

எந்த நடிகராக இருந்தாலும் ஏதாவது ஒரு அரசியல் கட்சி சார்பாகவும், அவர்களுக்கு பிடித்த அரசியல் தலைவர்கள் சார்பாகவும், கொஞ்சம் நேர்மையாக இருந்தாலும் அவர்கள் சார்பாக பேசுவார்கள். ஆனால் அஜித் வெளிப்படையான மனிதராக இருப்பார். எந்த தலைவருக்காகவும் பேச மாட்டார், தன் மனதில் பட்டதை மட்டும் பேசுவார்.

Also Read: ஜெயிலர் நரசிம்மனை தட்டி தூக்கிய விடாமுயற்சி படக்குழு.. ரஜினியை ஃபாலோ பண்ணும் அஜித்

பிடித்ததை செய்வார், பிடிக்கவில்லை என்றால் கடந்து விடுவார். இவரது திருமணத்திற்கு ஜெயலலிதா நேரில் சென்று வாழ்த்தி, அதன்பின் அஜித் மற்றும் ஷாலினியை கூப்பிட்டு விருந்து வைத்து ரசித்தார். ஜெயலலிதா அரசியலுக்கு வந்த பிறகு எந்த நடிகரையும் பிடித்து தன் வீட்டிற்கு கூப்பிட்டு விருந்து வைத்ததே கிடையாது.

திருமணத்திற்கு மட்டும் சென்று வந்துவிடுவார் இது அவரது வழக்கம். அதனால் அஜித்திற்கு செய்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்ட ஒன்று.  ஏதோ ஒன்று அஜித்தின் செயல்பாடுகளில் ஈர்ப்பு ஏற்பட்டு அவர் மீது மரியாதை நிமித்தமாக தான் ஜெயலலிதாசெய்தார். இன்று வரை அஜித்தும் அது மாதிரியே வெளிப்படையாகவே இருந்து வருகிறார்.

Also Read: சினிமா இண்டஸ்ட்ரிலாம் எங்களுக்கு தேவையே இல்லை.. விஜய், அஜித் செய்யும் கீழ்த்தரமான வேலைகள்

சமீப காலமாக அஜித் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்வதில்லை. காரணம் அவர் வெளிப்படையாக பேசுவதால் அதுவே அவருக்கு பிரச்சனையாகவும் மாறுகிறது. அதற்காக பயந்து தான் அஜித்தின் மனைவி ஷாலினி இப்போது அவரை பொது மேடையில்பேசுவதை அனுமதிப்பதில்லை.

காரணம் அவர் எல்லா உண்மைகளையும் வெளிப்படையாக யாருக்கும் பயமின்றி பேசக்கூடிய நபர். இதை அவர் ஒருபோதும் யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டார். இதனால்தான் அஜித்தை அவருடைய ரசிகர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர்.

Also Read: இமேஜை காப்பாற்ற அஜித் விளையாடிய பூங்காவை இழுத்து மூடிய பிரபலம்.. தெரியாதுன்னு சொன்னதற்கு இப்படி ஒரு காரணமா?

Continue Reading
To Top