சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலாவும், இளவரசியும் இன்று மாலை பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறை அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு வருகை தந்தனர். நீதிபதி அஸ்வத் நாராயண் முன்னிலையில் அவர்கள் சரணடைந்தனர்.

சசிகலா ஆதரவாளர்கள், ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் மாறி மாறி கோஷங்கள் எழுப்பினர். ஜெயலலிதாவை குற்றவாளியாக மாற்றியதே இந்த சசிகலாதான் என்று ஜெயலலிதா மற்றும் ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் கோஷமிட்டனர். சசிகலா உடன் வந்திருந்த ஸ்கார்பியோ கார் கண்ணாடியை ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் உடைத்தனர். இதையடுத்து மேலும் 5 கார் கண்ணாடிகளும் உடைக்கப்பட்டன. செருப்பால் கார்களை ஆவேசமாக அடித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், தாக்குதல் நடத்தியவர்களை லேசான தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.