ஜெயலலிதா இறந்ததும் சில சர்ச்சைகள் பிறந்துள்ளது. அவரது போயஸ் கார்டன் வீடு அவரது தோழி சசிகலாவுக்கு போகும் என சொல்லப்படுகிறது. ஆனால் அது பூர்வீக சொத்து அதனால் அது ஜெயாவின் அண்ணன் மகள் மற்றும் மகனுக்கே போகவேண்டும் என்றும் ஒருதரப்பு சொல்கிறது.

போயஸ் கார்டன் வீடான “வேதா நிலையம்” ஜெயலலிதாவின் தாயார் சந்தியா விலைக்கு வாங்கியதாம். அதனால் இந்த சொத்தில் பங்குபோட சசிகலாவுக்கு உரிமை இல்லை என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் கூறிவருகிறாராம். எனினும் இறுதிச்சடங்கை சசிகலாவுடன் இணைந்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.