Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு படம்..! தமிழ்நாட்டின் அயன் லேடியாக நடிக்கப்போகும் பிரபல நடிகை..
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு எடுக்கப்போகும் பிரபல இயக்குனர்..! தமிழ்நாட்டின் அயன் லேடி..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் நடிகையாக வலம் வந்தவர் ஜெயலலிதா. இவரது சினிமாவின் பங்கு இவரை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்த்தது. இவர் எம்.ஜி.ஆர் உடன் சேர்ந்து பல படங்களில் நடித்துள்ளார். பின்பு எம்.ஜி.ஆரின் கட்சியின் உறுப்பினராகவும் சேர்ந்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு பிறகு அவரது கட்சியை ஜெயலலிதா தலைமையில் நடைபெற்று வந்தது. ஜெயலலிதா அந்த காலத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் ஹீரோயினாக வலம் வந்தார்.
மக்களுக்காக தனது வாழ்க்கையை முழு அரசியலாக மாற்றி பல இன்னல்களை சந்தித்து சாதனை படைத்த தமிழ்நாடு அயன் லேடி என்று சொன்னால் அது நமது ஜெயலலிதாதான். மக்களுக்காக பல போராட்டங்களை நடத்தி மக்கள் நலனை தன் மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர். இவரது வாழ்க்கையை படமாக்க பல போட்டிகள் நடந்து கொண்டிருக்கின்றது சினிமாத்துறையில். இதனை சினிமாவாகவும் மற்றும் வெப் சீரியஸாகவும் எடுப்பதில் இயக்குனர்களுக்கு இடையே பெரும் போட்டி நிலவி வருகிறது.
மிஷ்கினின் உதவி இயக்குனரான பிரியதர்ஷன் இயக்கத்தில் நித்தியா மேனன் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உறுதி செய்யப்பட்டுள்ளன. ஆனால் யூடியூபில் ஜெயலலிதாவின் வாழ்க்கையை வெப் சீரியஸாகவும் எடுக்க உள்ளதாக இயக்குனர் கௌதம் மேனன் திட்டமிட்டுள்ளனர். இதில் ரம்யா கிருஷ்ணன் ஜெயலலிதாவாக நடிக்கிறார். இந்திரஜித், வினிதா ஆகியோரும் நடிக்கிறார்களாம்.
