ஜெயலலிதாவாக ஆசைப்படும் கோலிவுட்டின் முன்னணி நடிகை

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க மஞ்சிமா மோகன் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்.

சாதித்த பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்று படங்கள் சினிமாத்துறையில் அதிகரித்துள்ளது. ஜூனியர் என் டி ஆர், நடிகவேள் எம்.ஆர்.ராதா வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இதில், சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகிய சாவித்ரி வரலாறு அனைவரிடத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அதில், சாவித்ரியாக நடித்த கீர்த்தி சுரேஷை பலரும் பாராட்டினர். படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படம் பயோபிக் படங்களை ஊக்குவித்து இருக்கிறது.Manjima_Mohan

இந்நிலையில், நடிகை மஞ்சிமா மோகன் தமிழ்நாட்டின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வரலாறு படத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து இருக்கிறார். அவரின் தைரியம் எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என அவர் முடிவு செய்து விட்டால், எதற்காகவும் யோசிக்கமாட்டார். செய்து முடித்து விட்டே மற்றவற்றை யோசிப்பார். எல்லா பெண்களுக்கும் அந்த தைரியம் இருக்க வேண்டும் என நான் விரும்புகிறேன். பயோபிக் படங்களிலேயே அந்த வாய்ப்புக்காக தான் நான் என்றும் காத்திருப்பதாக குறிப்பிட்டு இருக்கிறார்.

1998ம் ஆண்டு வெளியான கலியோஞ்சல் என்னும் மலையாள படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை மஞ்சிமா மோகன். தொடர்ந்து, பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து புகழ் பெற்றவர். மலையாளத்தில் ஒரு வடக்கன் செல்பி படத்தின் மூலம் நாயகியாக ரசிகர்களிடம் அறிமுகம் ஆனார். இதை தொடர்ந்து, சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார். கொழுகொழு முகம், அடுத்த வீட்டு பெண் என்ற தோற்றத்தில் ரசிகர்களிடம் செம அப்ளாஸை பெற்றார். தமிழில் இப்படை வெல்லும், சத்ரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.