நடிகை நயன்தாரா, தான் நடிக்கும் படம் சம்பந்தப்பட்ட விளம்பர நிகழ்சிகளுக்கு கூட வரமாட்டார். அப்படி இருந்தும் அதிமுக சார்பாக சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

அதேபோல் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். கடந்த வருடம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர்கள் பலரும் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்க விரும்பினர்.

ஆனால் ஜெயலலிதா ஒருசிலரை மட்டும்தான் சந்தித்தார். அதில் நயன்தாராவும் ஒருவர். இப்படி பல விஷயங்களில் நயன்தாராவுக்கு மட்டும் சிறப்பு சலுகை வழங்கிவந்துள்ளார் ஜெயலலிதா. அது ஏன் என தற்போது ரசிகர்களிடம் கேள்வி எழுந்துள்ளது.