எம்ஜிஆர் நூற்றாண்டு விழா சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ நடந்தது. மேலும் தமிழகம் என்ன செய்துவிட்டு பெற்று 50 ஆண்டு காலம் நிறைவுற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் அதிமுக தொண்டர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்; ஓ.பி.எஸ் – இ.பி.எஸ் ஆகியோரின் இணைந்தது தமிழகத்தில் நமது இயக்கத்தின் இணையில்லா எழுச்சி. ஏழை, எளியவர்களின் வெற்றிமிகு சின்னமான நமது இரட்டை இலையின் வெற்றியாளர்கள் அவர்கள். கழகத்துக்கும், அம்மாவின் ஆட்சிக்கும் துரோகம் செய்ய நினைக்கும் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்த கழகத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கியான இ.பி.எஸ்-ஓ.பி.எஸ் அவர்களுக்கு என் முதற்கண் வணக்கம்’ என்று தனது பேச்சைத் தொடங்கினார். தனது உரையில் அவர் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் குறித்து புகழ்ந்து பேசினார். அவர் தன் பேச்சில், தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஆர்.கே. நகர் எம்.எல்.ஏ தினகரன், ரஜினி மற்றும் கமல் ஆகியோரை வரிசையாக விமர்சித்தார்.

அதிகம் படித்தவை:  3 மொழிகளில் படமாகிறது ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு: தலைப்பு கூட ரெடி!

மேலும் பொது பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் சமூக போராளிகளான சே குவேரா பிடல் காஸ்ட்ரோ ஆகியோருக்கு இணையானவர்கள் நம் நாட்டின் முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் இபிஎஸ் என காமெடியாக பேசி உன் பேச்சை முடித்தார்.