ஜெ., உயில் என்னிடம்: தீபக் ‘திடுக்’ தகவல்

சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், ஜெயலலிதாவின் உயில் தன்னிடம் இருப்பதாக அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். பேட்டியில் ‘திடுக்’: தனியார் ஆங்கில ‘டிவி’ சேனலுக்கு தீபக் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

என் அத்தை ஜெயலலிதா எழுதிய உயில் என் வசம் உள்ளது. அந்த உயிலில், அனைத்து சொத்துக்களும் என் பெயரிலும், என் சகோதரி தீபா பெயரிலும் எழுதப்பட்டுள்ளன. அதன்படி, சென்னை போயஸ் கார்டன் பங்களா, சென்னை பார்சன் காம்ப்ளக்சில் உள்ள இரண்டு கட்டடங்கள், சென்னை, செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள ஜெயலலிதா வீடு, கோடநாடு எஸ்டேட், ஐ தராபாத்தில் உள்ள திராட்சை தோட்டம் உள்ளிட்ட எட்டு சொத்துக்கள் எனக்கு சொந்தம்.இவ்வாறு தீபக் கூறியுள்ளார்.

Comments

comments

More Cinema News: