முன்னாள் முதல்வர் ஜெ., முதல்வராக பதவி ஏற்றதும் செய்த முதல் வேலை தங்கள் கட்சிக்கென்று ஒரு தொலைக்காட்சி சேனல் வேண்டும் என்பதே.

அதே போல ஜே. ஜே டிவி ஒன்றைத் துவங்கினார். அதன் பிறகு அந்த சேனல் மூடப்பட்டு அடுத்த ஆட்சியில் ஜெயா டிவி என்று கம்பீரமாக தனது ஒளிபரப்பை துவங்கியது அந்த சேனல்.

அதன் பிறகு அசுர வளர்ச்சி, சப் சேனல்கள் உருவாக்கினார் ஜெ., இன்று பத்து சேனல்களைக் கொண்டு ஜெயா குழுமம் என்று கோலோச்சிக் கொண்டிருகிறது ஜெயா டிவி.

ஜெ., இருக்கும் வரை பம்மிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வீறு கொண்டு எழுந்து தங்களை மாவீரர்கள் போல காட்டிக் கொள்கின்றனர்.

இந்த நேரத்தில் தான் அந்தச் செய்தி குபீர் என்று வருகிறது ஒரு பத்திரிக்கை வாயிலாக. அதாவது ஏப்ரல் ஒன்று முதல் ஜெயா டிவி, சசி டிவியாக மாறுகிறது?

எல்லாம் சரிங்க ஏப்ரல் ஒன்று யார் முட்டாள்கள் நண்பர்களே..? முடிவு காட்டுங்கள் மாணவர்களே.