நடந்து முடிந்தது பும்ராவின் திருமணம்.. அட மணப்பெண் இவரா என வாய் பிளக்கும் நெட்டிசன்கள்!

ஜஸ்பிரித் பும்ரா – குஜராத்தில் பிறந்தவர். அந்த ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்தவரை அசத்தலான டாலண்ட் என் உணர்த்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு தங்கள் டீம் சார்பில் ஐபிஎல் இல் களம் இறக்கினார்கள். அதன் பின் இவர் வளர்ச்சி அசுர வேகம் தான். இன்று இந்தியாவின் சிறந்த வேகப்பந்துவீச்சாளர்.

பும்ரா இதுவரை 19 டெஸ்ட் 67 ஒரு நாள் போட்டிகள், 50 டி 20 போட்டிகளில் ஆடியுள்ளார். சமீபத்தில் நடந்த இங்கிலாந்து தொடரில் தனது தனிப்பட்ட சொந்த காரணங்களுக்காக விதிப்பு எடுத்தார். மேலும் டி 20 டீம்மிலும் இவரை இடம் பெறவில்லை. அந்த நேரத்திலேயே இவர் திருமணத்திற்காக தான் விதிப்பு எடுத்துள்ளார் என சொல்லப்பட்டது.

jasprit-bumrah-1
jasprit-bumrah-1

இந்நிலையில் நேற்று கோவாவில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் சஞ்சனா கணேசன் அவர்களை திருமணம் செய்துள்ளார் பும்ரா. போட்டோக்களை இந்த ஜோடி தங்கள் சமூகவலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.

28 வயதான சஞ்சனா கணேசன் அவர்களின் குடும்பம் புனேவில் செட்டில் ஆகி உள்ளனர். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சானலில் தொகுப்பாளர் இவர். மேட்ச் பாயிண்ட், சீக்கி சிங்கிள்ஸ் போன்ற நிகழ்ச்சிகளை 2019 உலகக்கோப்பை நேரத்தில் தொகுத்து வழங்கியது வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். 2012 இல் மிஸ் பெமினா போட்டியாளர், மோடெல்லிங் துறையிலும் கலக்கியவர் சஞ்சனா. பன்முக திறமை உடையவர்.

jasprit-bumrah-2
jasprit-bumrah-2

சமூகவலைத்தளங்களில் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலர் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.