அவரெல்லாம் எனக்கு முன்னால ஒரு குழந்தை பவுலர்.. தொடர்ந்து இந்திய அணியை வம்பிழுக்கும் பாகிஸ்தான் வீரர்!

இந்திய அணி கடந்த சில வருடங்களாக சிறந்த பவுலிங் அணியாக உருவெடுத்து வருகிறது. அதற்கு காரணம் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சமி, உமேஷ் யாதவ் போன்ற முக்கியமான பௌலர்களின் வருகையால் தான். இவர்களால் இந்திய அணி சமீபகாலமாக எதிரணியை அச்சுறுத்தி வருகிறது.

அதிலும் குறிப்பாக ஜஸ்பிரித் பும்ராவை யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் அவரது பவுலிங் என்னிடம் பலிக்காது என பாகிஸ்தானின் முன்னாள் பவுலர் ஒருவர் வம்புக்கு இழுத்துள்ளார்.

Jasprit-Cinemapettai.jpg
Jasprit-Cinemapettai.jpg

சோயிப் அக்தர், கிளன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்றவர்களிடம் ஒப்பிடும்போது பும்ராவெல்லாம் எனக்கு சின்ன குழந்தை மாதிரி. அவருடைய பவுலிங்கை ஒரு கை பார்த்து விடுவேன் என மார் தட்டுகிறார் பாகிஸ்தானின் அப்துல் ரசாக்.

நான் விளையாடிய காலத்தில் பும்ரா மட்டும் விளையாடினால் அவரது பந்துவீச்சை எளிதாக சமாளித்து விடுவேன். மேலும் ரசாக் பல உலகத்தரமான பவுலர்களை எதிர் கொண்டுள்ளதாகவும் அதனால் பும்ரா போன்ற பவுலரை எதிர்கொள்வது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை,  அது அவருக்கு தான் நெருக்கடியாக இருக்கும் என வம்பாக பேசி உள்ளார்.

Razaq-Cinemapettai.jpg
Razaq-Cinemapettai.jpg

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் பும்ரா தான் நம்பர்-1 பவுலராக உள்ளார். அவர் சிறந்த பவுலராக இருக்க, அவரின் விசித்திரமான பவுலிங் ஆக்‌ஷன் தான் காரணம் என அப்துல் ரசாக் கூறுகிறார்.

எப்பொழுதும் இந்தியாவை வம்புக்கு இழுக்கும் அப்துல் ரசாக் இப்பொழுது பும்ராவை வம்புக்கு இழுத்துள்ளார். இதற்கு முன்னர் இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவிற்கு இன்னும் பயிற்சி வேண்டும் இந்தியா அனுமதித்தால் தான் பயிற்சி கொடுப்பதாக கூறியுள்ளார்.