6 வெவ்வேறு பௌலர்களின் ஸ்டைலில் பந்து வீசிய பும்ரா..

ஜஸ்பிரித் பும்ரா – குஜராத்தில் பிறந்தவர். அந்த ஸ்டேட் அணிக்காக விளையாடி வந்தவரை அசத்தலான டாலண்ட் என் உணர்த்த மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் 2013 ஆம் ஆண்டு தங்கள் டீம் சார்பில் ஐபிஎல் இல் களம் இறக்கினார்கள். அதன் பின் இவர் வளர்ச்சி அசுர வேகம் தான்.

யார்கர் மன்னன் என்ற பெயரும் இவருடன் ஒட்டிக்கொண்டது. பும்ராவின் அசாத்திய திறமையும் துல்லியமும் உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களுக்கு இவரை சிம்ம சொப்பனம் ஆக்கி விட்டது.

மலிங்கா உள்ள ஐபிஎல் டீம்மில் அவரை ஓவர் டேக் செய்யும் அளவு திறமை உள்ளவர். கொரானாவின் தாக்கத்தால் இம்முறை போட்டிகள் துபாய்க்கு மாற்றிவிட்டது. அங்கு வலைப்பயிற்சி சமயத்தில் வேற சில பந்துவீச்சாளர்கள் ஸ்டைலில் பும்ரா வீசிய விடியோவை மும்பை நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்டது.

மேலும் யார் இந்த பௌலர்கள் என கண்டுபிடிக்கவும் போட்டி வைத்தனர். அவர்கள் முறையே முனாப் படேல், க்ளென் மெக்ராத், மிட்சேல் ஸ்டார்க், கேதார் ஜாதவ், ஷ்ரேயஸ் கோபால் மற்றும் அணில் கும்ப்ளே ஆகும்.