ஐ.பி.எல் பத்தாவது சீசனில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து அணியின் துவக்க வீரர் ஜேஸன் ராய் இன்று சொந்த நாட்டுக்கு திரும்புவதாக தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் அணியில் இடம்பெற்றிருக்கும்  இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய். குஜராத் லயன்ஸ் அணிக்காக விளையாடி 3 போட்டிகளிலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு செயல்படாததால் அடுத்தடுத்த போட்டிகளில் அணியில் இடம்பெற முடியாமல் தவித்து வந்ததால், சொந்த நாட்டுக்கே திரும்ப திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று தான் இங்கிலாந்துக்கு திரும்புவதாகவும், தனக்கு ஐ.பி.எல்  தொடரில் வாய்ப்பு கொடுத்த குஜராத் அணிக்கு நன்றி என்றும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜேஸன் ராய் பதிவிட்டுள்ளார்.