Sports | விளையாட்டு
இந்திய அணியில் வருங்கால ஜாம்பவான்.. புகழ்ந்து தள்ளிய ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் கில்லஸ்பி!
இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரில் ஆட உள்ள நிலையில் பும்ரா குறித்தும், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சு குறித்தும் பேசி உள்ளார் முன்னாள் ஆஸ்திரேலியா வீரர் கில்லெஸ்பி.
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு கடந்த சில வருடங்களாக மற்ற அணியினரை பயமுறுத்தி வருகிறது.
பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா கூட்டணி மிகவும் சிறப்பாக செயல்படுகிறது. குறிப்பாக பும்ரா தனது திறமையான பந்து வீச்சு மூலம் எதிரணியினரை திணறடித்து வருகிறார்.
டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகள் என அனைத்திலும் தன் வித்தியாசமான பந்துவீச்சு மற்றும் யார்க்கர்கள் மூலம் மற்ற அணிகளை அச்சுறுத்துகிறார்.
பும்ரா ஓய்வு பெறும் போது அவர் பெரிய சூப்பர்ஸ்டாராக இருப்பார். அவர் மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவின் மாபெரும் வீரராக பெயர் எடுப்பார்.
மேலும் இந்திய அணியில் முன்பை விட நிறைய வேகப் பந்துவீச்சாளர்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள் எனவும் ஜேசன் கில்லஸ்பி பெருமைப்படுத்தி உள்ளார்.

jasprit bumrah
