தென்னிந்திய படமாக ராஜமௌலி அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட பாகுபலி சர்வதேச அளவில் உலகளாவிய பிசினஸ் செய்து அனைவரும் ஆச்சர்யப்படும் படி வசூல் வேட்டை நிகழ்த்தியது. ஜப்பான், சீன போன்ற நாடுகளிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது படம்.

ஜப்பானில் பாகுபலி 2
Bahubali 2 Poster

கடந்த டிசம்பர் 31ம் தேதி ஜப்பானில் வெளியானது இப்படம். அங்கும் 100 நாட்களுக்கும் மேல் ஓடி 15 மில்லியன் டாலர்கள் வசூலித்தது. ஜப்பான் வினியோகஸ்தர்கள் விடுத்த சிறப்பு அழைப்பின் பெயரில் இயக்குனர் ராஜமௌலி மற்றும் தயாரிப்பாளர் ஷோபு ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். அங்கு ‘பாகுபலி 2’ படத்தின் சிறப்புத் திரையிடல் நடைபெற்றது. அதில் இயக்குனர் ராஜமௌலி கலந்துக் கொண்டுள்ளார்.

அதிகம் படித்தவை:  விஷால் அதிரேடி முடிவு! ஆட்டம் காணும் அஜீத், விஜய்! ஷூட்டிங் நிறுத்தப்படுமா?

ஜப்பான் ரசிகர்களுடன் செலஃபீ எடுத்தார் ராஜமௌலி. திரை அரங்கில் உள்ள ரசிகர்கள் ‘பாகுபலி’, ‘பாகுபலி’ என ஆரவார குரல் எழுப்ப ராஜமௌலி மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றாராம்.

அதிகம் படித்தவை:  சந்தையில் மாடு வாங்குவது போல படக்குழுவை முடிவு செய்யும் தயாரிப்பாளர் - இயக்குனரின் வீடியோ : ஜெயம் ரவி 24 !

ஜப்பானில் எடுக்கப்பட்ட அந்த நிகழ்வின் வீடியோ லிங்க் இதோ.