வருகிற ஜனவரி 25&26 அன்று ரிலீஸ் ஆகும் தமிழ் படங்கள்

பொங்கல் பண்டிகைகளில் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் விக்ரமின் ஸ்கெட்ச் என பெரிய நடிகர்களின் படம் வந்ததால் மற்ற படங்களுக்கு தியேட்டர் கிடைப்பது கடினமாக இருந்தது.

அதுமட்டும் இல்லாமல் பொங்களில் ரிலீஸ் செய்தால் படத்தின் வசூல் பாதிக்கப்படும் என கருதி ஜனவரி 26ல் சில படங்களை ரிலீஸ் செய்துகொள்ளலாம் என பல தயாரிப்பாளர்கள் முடிவு செய்திருந்தார்கள்.

மேலும் ஜனவரி 26ல் தொடர்ந்து 3நாள் விடுமுறையாக வருகிறது அதனால் படம் நன்றாக ஓடிவிடும் என தயாரிப்பாளர்கள் அன்று ரிலீஸ் செய்கிறார்கள்.

பாக்மதி

anushka

அனுஷ்கா தற்போது நடித்து முடித்திருக்கும் படம் ‘பாக்மதி’. இந்த படம்  திரில்லர் படமாக உருவாகும் இதில் அனுஷ்காவுடன் இணைந்து உன்னி முகுந்தன், ஆதி, ஜெயராம், ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்தை ஜி. அசோக் இயக்கியுள்ளார்.

அதிகம் படித்தவை:  சிம்புவின் AAA படத்தில் இருந்து வெளியான ஒரு வசனம்- ரசிகர்கள் மகிழ்ச்சி

தற்போது பாக்மதி படத்தின் இறுதிகட்ட பணிகளும் முடிந்துள்ளது. இந்த நிலையில், இப்படம் ஜனவரியில்  வெளியாகும்.

நிமிர்

nimir

பிரபல தேசிய விருது பெற்ற இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் படம் நிமிர் இதில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ளார்.

மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற மகேஷிண்டே பிரதிகாரம் படத்தின் ரீமேக் தன் இந்த படம். படத்தில் மகேந்திரன், நமீதா பிரமோத்,சமுத்திரக்கனி, பார்வதி நாயர், எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன் என பல சினிமா பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

தமிழ் ரீமேக்கிற்கு சமுத்திரக்கனி தான் வசனம் எழுதியுள்ளார். தர்புகா சிவா இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் இந்த படத்தில் பணியாற்றியுள்ளார்.இந்த படம் ஜனவரி ரிலீஸ் ஆகிறது.

மன்னர் வகையறா

mannar

விமல் கயல் ஆனந்தி சேர்ந்து நடித்துள்ள படம் மன்னர் வகையறா இந்த படத்தை பூபதி பாண்டியன் இயக்கியுள்ளார்.பிரபு, சரண்யா பொன்வண்ணன், ரோபோ சங்கர், கார்த்திக் குமார், நீலிமா ராணி, நாஷர், ஜெயப்பிரகாஷ், யோகி பாபு, என ஒரு நட்சத்திர பட்டாளே இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  சிம்புவின் AAA மாஸ் செட்டில் படப்பிடிப்பு- வெளியான பாடல் வீடியோ இதோ

மேலும் இந்த படத்தை A3V நிறுவனம் மூலம் விமலே தயாரித்து நடித்துள்ளார். துருவங்கள் பதினாரு படத்திற்கு இசையமைத்த ஜேக்ஸ் பிஜோய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பத்மாவத்

padmavati Deepika Padukone
padmavati Deepika Padukone

சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகியுள்ள வரலாற்றுப் படம், பத்மாவதி. ராஜஸ்தான் மாநிலம் சித்தூர்கர் பகுதியை சேர்ந்த ராணி பத்மாவதியின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. பத்மாவதியாகத் தீபிகா படுகோனும் ராணா ரத்தன் சிங்காக ஷாகித் கபூரும் அலாவுதீன் கில்ஜியாக ரன்வீர் சிங்கும் நடித்துள்ளனர்.பத்மாவதி படமும் ஜனவரி ரிலீஸ் ஆகிறது.