Tamil Cinema News | சினிமா செய்திகள்
அட நம்ம ஜாங்கிரி மதுமிதாவுக்கு கல்யாணம்.. மாப்பிளை யாரு தெரியுமா? இதோ போட்டோ
Jangiri Madhumitha : அட நம்ம ஜாங்கிரி மதுமிதாவுக்கு கல்யாணம்.
நடிகை மதுமிதா என்றால் பலருக்கு தெரியாது ஆனால் அடை தேனடை என்று சொன்னாலே முதலில் அனைவரும் நினைவுக்கு வருவது உதயநிதி ஸ்டாலின் படமான ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தில் சந்தானத்தின் காதலியாக நடித்த மதுமிதா தான், இந்த படத்தின் மூலம் அவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதனை தொடர்ந்து சில படங்களில் காமெடி ரோலில் கலக்கிக்கொண்டு வந்தார், இதே நிலையில் தற்போது ஒரு செய்தி இணையதளங்களில் தீயாக பரவி வருகிறது அது வேற செய்திகள் எதுவும் இல்லை அவரின் திருமண செய்தி தான். விரைவில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார், மாப்பிள்ளை யார் என்றால் மதுமிதாவின் தாய்மாமனும் உதவி இயக்குனருமான மோசஸ் என்பவர் தான்.
இவர்கள் இருவரும் பிப்ரவரி 15ம் தேதி திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள், மேலும் பிரபல பத்திரிகைக்கு பேட்டி கொடுத்த மதுமிதா கூறியதாவது ” நான் விஸ்வாசம் படத்தில் அஜித்திற்கு தங்கையாக நடித்தேன், மேலும் சில படங்களில் தங்கையாக நடித்து கொண்டு இருக்கிறேன்.

madhumitha
இந்த நிலையில் எனது தாய் மாமாவான மோசஸ் ஜோயால் ( இவர் சில குறும்படங்களை இயக்கியுள்ளார் மேலும் பிரபல இயக்குனரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்) இவர் அந்தத்துறையில் இருப்பதை பார்த்து தான் நானும் முதன் முதலில் நடிக்க வந்தேன் இப்பொழுது அவரை எனக்கு வாழ்க்கை துணையாக வருகிறார் எனது அப்பா மறைவிற்குப் பிறகு நான் மிகவும் போராடி தான் இந்த நிலையை அடைந்தேன் என அவர் கூறினார்.

madhumitha
