Connect with us

Cinemapettai

பண மாற்ற விவகாரம்! திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளுக்கு ‘அனுப்பிய’ மூன்று நடிகைகள் ! ஜனா மீண்டும் கஸ்டடி?!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பண மாற்ற விவகாரம்! திருப்பதி தேவஸ்தான நிர்வாகிகளுக்கு ‘அனுப்பிய’ மூன்று நடிகைகள் ! ஜனா மீண்டும் கஸ்டடி?!

லைவ் டே வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அரசியல்வாதிகளுக்காக செல்லாத ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புது நோட்டுகளாக மாற்ற திருப்பதி தேவஸ்தானம் உதவியாக  செயல்பட்டது என்கிற செய்தியும் அதற்கு ரெட்டி, ராம மோகனராவ் போன்றவர்கள் பெரிய அளவில் பணமாகவும் பரிசுப் பொருட்களாகவும்  பெண்களை அனுப்பியும் காரியம் சாதித்தார்கள் என்று விலாவாரியாக எழுதி இருந்தோம்.

நிறைய ஆதார பூர்வமான கட்டுரைகளை உங்களுக்கு வழங்கினோம். அதில் முக்கியமான குற்றச்சாட்டு பெண்களை அனுப்பியது.

ஜனாவும் தினகரனும் டெல்லி சிபிஐயில் அறுபது கோடி ரூபாய் லஞ்ச விசயத்தில் மாட்டிக்கொள்ள  தோண்ட, தோண்ட பூதங்கள் வந்து கொண்டே இருக்கிறது. மீண்டும் போலீஸ் காவலில் தினகரனை விசாரிக்க சிபிஐ முடிவு செய்திருக்கிறது என்கிறார்கள்.

தினகரனின் கைக்கூலியாகவும் வலதுகரமாகவும் இருந்த ஜெயா டிவி ஜனாவைக் கவனித்த கவனிப்பில் மொத்தமாகப் போட்டு  கொடுத்து விட்டார்.

அதை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறது சிபிஐ. இந்த ஆதாரங்களை கண்டு தான் மொத்தமாக அடங்கிக் கதற ஆரம்பித்துள்ளார் தினகரன்.

இதில் ராம மோகனராவ், ரெட்டி போன்றவர்களின் பண மாற்று விவகாரம், அதற்கு நடந்த பேரங்கள், கைமாறிய பெட்டிகள், கொடுக்கல், வாங்கல்கள் நடந்த இடங்கள், பெண்கள் மற்றும் முக்கியமான தெலுங்கு நடிகைகள் மூன்று பேர்.. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம்..? இப்படி போகிறது விசாரணை விவகாரம்.

தேவைப்பட்டால் ஜனாவை மீண்டும் கஸ்டடியில் எடுப்போம் என்கிறது சிபிஐ தரப்பு. எல்லா பேரங்களும், அந்த மூன்று ஹீரோயின்களை வைத்தே நடந்திருப்பதாகவும் கூறுகிறார்கள்.

அப்போ அந்த தேவலோகத்து பெயர் கொண்ட நடிகை, முக்கனிகளில் ஒரு கனி பெயர் கொண்ட தெலுங்கு நடிகை, பூக்களில் ஒரு பெயர் கொண்ட தெலுங்கு நடிகை இவர்களும்  டெல்லி போக வேண்டியதிருக்கும்..என்கிறார்கள்.

இந்த  செய்தி அறிந்து கதி கலங்கிப் போய் கிடக்கிறது தெலுங்கு பட உலகம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top