புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

அநாகரிகமாக பேசிய கதிரை அடிக்கும் ஜனனி.. குணசேகரனின் தில்லாலங்கடி வேலை

எதிர்நீச்சல் சீரியலில் கொஞ்ச நாளாகவே 40% சொத்து தான் ட்ரெண்டிங் ஆக போய்க்கொண்டிருந்தது. தற்போது அப்பத்தா சொன்ன அந்த ஜீவானந்தம் யார் என்பது தான் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. அந்த ஜீவானந்தம் வந்தா எல்லா விஷயத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும். ஆனால் அந்த கேரக்டரை உள்ளே கொண்டு வராமல் மறுபடியும் குணசேகரன் கதிர் செய்யும் தில்லாலங்கடி வேலையை தொடர்ந்து எபிசோடுகளாக வருகிறது.

இதை பார்ப்பதற்கு ரொம்பவே கடுப்பாகிற அளவுக்கு இருக்கிறது. குணசேகரன் நினைத்தபடி அப்பத்தாவை அவருடைய வீட்டுக்கு கூட்டு வந்து விட்டார். இதை தெரிந்த ஜனனி சக்தி, அப்பத்தாவை நாங்கள் பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஆனால் குணசேகரன் உனக்கும் அப்பத்தாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நீ பார்ப்பதற்கு நான் அனுமதியும் கொடுக்க மாட்டேன் என்று பிடிவாதமாக கூறுகிறார்.

Also read: தத்தியாக இருக்கும் பாக்கியா.. கோபியை ஒவ்வொரு நாளும் ராதிகா செய்யும் டார்ச்சர்

ஆனாலும் ஜனனி, நான் அப்பத்தாவை கண்டிப்பாக பார்க்கவேண்டும் என்று சொல்கிறார். அதற்கு கதிர் அதெல்லாம் முடியாது-டி நீ இங்க இருந்து கிளம்பு அப்படின்னு அநாகரிகமாக பேசுகிறார். இதைப் பார்த்த சக்தி ஆவேசத்தில் கதிரிடம் சண்டை போடுகிறார். அடுத்து குணசேகரன் நீங்க என்ன செஞ்சாலும் நான் அப்பத்தாவை பார்க்க விட மாட்டேன் என்று கூறி நீங்கள் அப்பத்தாவிற்கு இதுவரை அப்படி என்ன செஞ்சுட்டீங்க என்று கேட்கிறார்.

அதற்கு சக்தி குணசேகரனுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக நீங்கள் மட்டும் அப்பத்தாவிற்கு என்ன செஞ்சீங்க என்று கேட்கிறார். இப்படி அங்கு இருக்கிறவர்கள் அனைவரும் வாக்குவாதத்தில் ஈடுபட ஜனனி அப்பத்தாவை பார்க்க உள்ளே போகிறார். உடனே கதிர் ஜனனியை தடுத்து தரதரவென்று கீழே இறக்கி விடுகிறார்.

Also read: ஐஸ்வர்யா ஓவர் ஆட்டத்தால் வந்த விளைவு.. இறுதி கட்டத்தை நோக்கி பரபரப்பாக நகரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்

இதற்கு மேலேயும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று ஆவேசத்தில் கதிரை ஜனனி அடிக்கப் போகிறார். பிறகு அங்கு இருக்கும் ரேணுகா ஈஸ்வரி ஜனனியை தடுக்கிறார்கள். அடுத்ததாக ஜனனி எடுக்க போகும் முடிவு இதற்கெல்லாம் அப்பத்தா சொன்ன ஜீவானந்தம் வந்தால் மட்டும் தான் எல்லா பிரச்சினைக்கும் தீர்வாக இருக்கும் என்று சொல்கிறார்.

அத்துடன் நான் எப்படியாவது போய் ஜீவானந்தம் யார் என்று விசாரித்து அவரை கூட்டிட்டு வருகிறேன் என்று ஜனனி கிளம்புகிறார். இவருக்கு துணையாக சக்தியும் போகிறார். பிறகு அந்த ஜீவானந்தம் வந்தால் மட்டும் தான் குணசேகரனின் ஆட்டம் அடங்கும் என்ற நிலைமைக்கு அப்பத்தா 40% சொத்தில் ஒரு ட்விஸ்ட் வைத்திருக்கிறார். அதே மாதிரி அந்த ஜீவானந்தமும் கூடிய விரைவில் வந்தால் இன்னும் இந்த நாடகம் விறுவிறுப்பாக போகும்.

Also read: குணசேகரனின் சுயரூபத்தை தெரிந்து கொண்ட மக்கு ஆதிரை.. விசாலாட்சி எடுக்க போகும் முடிவு என்ன

- Advertisement -

Trending News