பெயரில் இருந்த ஜாதியை தூக்கி எறிந்த ஜனனி அய்யர்.. அதுக்கு அவங்க சொன்ன விஷயம்தான் ஹைலைட்!

கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவிகளிடம் ஆண் ஆசிரியர்கள் அத்துமீறும் புகார் அதிகமாகிக் கொண்டே செல்கிறது. அதிலும் சென்னையில் உள்ள முக்கிய பள்ளிகளில் இப்படி நடந்திருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னையில் உள்ள பாரம்பரிய பள்ளிகளில் ஒன்றான பிஎஸ்பிபி பள்ளியில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் ஆன்லைன் வகுப்புகளில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக பெண் பிள்ளைகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

அதேபோல் சென்னையில் உள்ள மற்றொரு பள்ளியான மகரிஷி வித்யா மந்திர் பள்ளியிலும் இதுபோன்ற புகார் வந்ததைத் தொடர்ந்து அங்கேயும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி மாணவிகளிடம் ஆசிரியர்கள் தவறாக நடந்து கொண்டதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்தனர். அதிலும் விஷால் எல்லாம் வேற லெவல் கொந்தளித்து வெடித்துச் சிதறியுள்ளார்.

இது ஒருபுறமிருக்க மாணவிகள் பிரச்சனையை சமூக ஜாதிப் பிரச்சினையாகவும் ஒரு பக்கமாக மாற்றி விட்டனர். இந்நிலையில் பிரபல நடிகை ஜனனி ஐயர் தன்னுடைய பெயரிலிருந்த ஐயர் என்ற ஜாதியை நீக்கியுள்ளார்.

janani-removed-her-identity
janani-removed-her-identity

அதற்கு மாற்றம் ஒன்றே மாறாதது என்ற பதிவை போட்டு அனைவரது மனதையும் கலங்கடித்து விட்டார். ஜனனியின் இந்த பதிவால் அவருக்கு பாராட்டுகள் குவிந்து கொண்டிருக்கின்றன.