புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

சந்தியா ராகம் சீரியலில் புவனேஸ்வரியின் சதியை முறியடித்த ஜானகி.. புத்தி இல்லாமல் தனம் எடுத்த முடிவு

SandhiyaRagam Serial: ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகி வரும் சந்தியாராகம் சீரியலில், மாயா எப்படியாவது தனத்தின் வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக கதிரை வைத்து தனத்தின் கழுத்தில் தாலி கட்ட வைத்து விட்டார். ஆனால் எதற்காக மாயா இப்படி பண்ணினார் என்று தெரியாத ரகுராம் குடும்பத்தில் இருப்பவர்கள் மாயா மற்றும் கதிரை வெறுக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அப்பொழுது கதிர் உண்மை சொல்ல வரும்பொழுது கார்த்திக் உள்ளே புகுந்து ஆட்டையை குழப்பும் விதமாக சீனுவின் அப்பா வயிற்றில் குத்திவிட்டார். இதனால் அனைவரும் சீனுவின் அப்பாவுக்கு என்ன ஆச்சு என்ற பதட்டத்துடன் ஆஸ்பத்திரிக்கு கொண்டு போய் சேர்த்து விட்டார்கள்.

இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பத்மா, மாயாவை தரக்குறைவாக பேசி அங்கு இருந்து வெளியே அனுப்ப பார்க்கிறார். பத்மாவுக்கு மாயா பற்றி தெரியாது பிடிக்கவும் பிடிக்காது, அதனால் கோபப்படுவதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் மாயா எப்படிப்பட்டவர் என்ன செஞ்சாலும் சரியாகத்தான் இருக்கும் என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் சீனுவும், மாயாவை திட்டுவிட்டு வெறுக்கிறார்.

அடுத்ததாக மாயாவை சந்தித்து ஜானகி எல்லா உண்மையும் தெரிந்து கொண்டார். அந்த வகையில் மாயா மற்றும் கதிருக்கு ஜானகி சப்போர்ட் பண்ணி வருகிறார். இதற்கு இடையில் கதிர் கையால் தாலி வாங்கிய தனம் புவனேஸ்வரி வீட்டுக்கு போய் விடுகிறார். ரகுராம் வீட்டில் தனத்தை காணும் என்று அனைவரும் பதட்டத்துடன் தேடிப் பார்க்கிறார்கள்.

உடனே மாயா மற்றும் கதிர் இருவரும் சேர்ந்து புவனேஸ்வரி வீட்டுக்கு போகிறார்கள். புவனேஸ்வரி என் வீட்டுக்கு தனம் வரவில்லை. சீக்கிரம் வெளியே எங்கேயாவது தேடிப் பாருங்க, இல்லையென்றால் தனம் வேறு ஏதாவது தவறான முடிவு எடுக்க வாய்ப்பு இருக்கிறது என்று வெளியே அனுப்பி வைத்து விடுகிறார். உடனே மாயா மற்றும் கதிர் வேறு பக்கம் தேடிப் போய்விட்டார்கள்.

ஆனால் தனம், புவனேஸ்வரி வீட்டில் தான் இருக்கிறார். இதை பயன்படுத்தி ரகுராம் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என்று புவனேஸ்வரி யாருக்கும் தெரியாமல் கார்த்திக்கும் தனத்திற்கும் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி வைக்கலாம் என்று ரெஜிஸ்டர் ஆபீஸ் வீட்டுக்கு வரவைத்து எல்லா ஏற்பாடுகளையும் பண்ண ஆரம்பித்து விட்டார்.

இதற்கு எந்தவித மறுப்பும் சொல்லாமல் தனமும் ரெடியாகி நிற்கிறார். அப்பொழுது ரிஜிஸ்டர் பண்ணும் ஆபீசர் தனத்திடம் உங்க அப்பா அம்மா வரவில்லையா என்று கேட்கிறார். அதற்கு பதில் சொல்ல முடியாமல் தனம் முழித்துக் கொண்டிருக்கிறார். அந்த நேரத்தில் ஜானகி நான் இருக்கிறேன் என்று அதிரடியாக புவனேஸ்வரி வீட்டுக்கு வந்து விடுகிறார்.

ஜானகி உடன் மாயவும் வந்திருக்கிறார், புவனேஸ்வரி செய்யும் சதியிலிருந்து குடும்பத்தையும் தனத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஜானகி விஸ்வரூபம் எடுக்கும் வகையில் புவனேஸ்வரி கன்னத்தில் பளார் என்று அறைந்து என் குடும்பத்தை உன்னிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் என்ன வேணாலும் செய்வேன் என்று பொங்க ஆரம்பித்து விட்டார். இப்பொழுது தான் இந்த சீரியல் சூடு பிடிக்கிறது என்பதற்கு ஏற்ப ஜானகியின் விஸ்வரூபம் விறுவிறுப்பாக இருக்கிறது.

- Advertisement -

Trending News