தமிழ் சினிமாவில் பல படங்களில் நகைச்சுவை வேடத்திலும், சில படங்களில் குணச்சித்திர வேடத்திலும் நடித்து கலக்கியவர் நம் ஜனகராஜ். கிட்ட தட்ட 100 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். பின்னர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார்.

96 movie

தற்பொழுது விஜய் சேதுபதி – திரிஷா இணைந்து நடித்துள்ள 96 , சாருஹாசனின் தாதா 87 படங்களில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தினை தொடர்ந்து `தர்ம அவதாரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள படத்தில் ஹீரோவாக நடிக்கப்போகிறாராம்.  ஒரு மிடில் கிளாஸ் தந்தைக்கு இந்த சமூகத்தின் மேல் ஏற்படும் கோபத்தால் என்ன நிகழ்கிறது என்பது தான் படத்தின் கதையாம். ஜனகராஜின் கதாபாத்திர அமைப்பு அனைவரின் மனதையும் கவருமாம். இப்படத்தினை விஜய் ஸ்ரீ என்பவர் இயக்குகிறார். ஒரே ஷெட்யூலில் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் முடிக்க திட்டமிட்டுள்ள படக்குழுவினர் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் ஊட்டியில் தொடங்க உள்ளதாம்.

அதிகம் படித்தவை:  தனி ஒருவனாக கொல்கத்தாவின் வரலாற்றை மாற்றி எழுதிய ராகுல் திருப்பதி.. சொந்த மண்ணில் வீழ்ந்தது கொல்கத்தா !
Dha Dha 87

தாதா 87

dha-dha-87

இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி இன்னமும் வெளிவராத படம் தாதா 87 . இப்படத்தில் சாருஹாசன் ஹீரோவாக நடித்துள்ளார். இப்படத்தில் கீர்த்தி சுரேஷின் பாட்டி சரோஜா , ஜனகராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

அதிகம் படித்தவை:  பாகுபலி தயாரிப்பாளர்களுக்கு மிரட்டல் விட்ட மர்ம கும்பல்! பின்னணியில் யார்

இப்படத்தின் போஸ்டர், டீஸர், பாடல்கள் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. விரைவில் இப்படமும் ரிலீஸ் ஆகுமாம்.