கோயிலில் பிச்சை எடுத்த சினிமா டான்ஸர் ஜமுனாவுக்கு மாதம் மாதம் உதவித் தொகை வழங்க நடிகர் சங்க செயலாளர் நடிகர் விஷால் முடிவு செய்துள்ளார்.

ஜெயலலிதா, சிவாஜி போன்ற முக்கிய நட்சத்திரங்களுடன் குரூப் டான்ஸராக பணியாற்றியவர் நடிகை ஜமுனா. ‘மோட்டார் சுந்தரம் பிள்ளை’, ‘ஔவையார்’, ‘சரஸ்வதி சபதம்’ உள்ளிட்ட பல படங்களில் குரூப் டான்ஸராக நடித்துள்ளார். தற்போது 80 வயது ஆன அவர் வடபழனி முருகன் பகுதியில் பிச்சையெடுத்து வாழ்ந்து வருகிறார். இது குறித்த செய்திகள் சமூக வலைதளங்களிலும் பத்திரிக்கைகளிலும் வெளிவந்தன.

இந்த நிலையில் இந்த செய்திகளை அறிந்த நடிகரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான விஷால் ஜமுனாவுக்கு உதவி செய்ய முடிவெடுத்தார். அதன்படி தன்னுடைய மேலாளர் முருகராஜ் மற்றும் அகில இந்திய விஷால் ரசிகர் மன்ற செயலாளர் ஹரி கிருஷ்ணனையும் ஜமுனாவை சந்திக்க அனுப்பினார். அப்போது ஜமுனாவிடம் உங்களை முதியோர் இல்லத்தில் சேர்க்கிறோம் என்று கூறியுள்ளனர். ஆனால் அதனை ஏற்காத ஜமுனா, தனக்கு மாதம் மாதம் உதவி தொகைவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இதையடுத்து மாதம் தோறும் 2000 ருபாய் வழங்க வாக்குறுதி அளித்தனர்.