Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முதல் முதலாக ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்த பிரபலம் காலமானார்! RIP LEGEND

ஜேம்ஸ் பாண்ட் 007 நம் அனைவரின் உள்ளம் கவர்ந்த ரகசிய உளவாளி. இயன் பிளெமிங் உருவாக்கிய கற்பனை கதாபாத்திரம். சினிமாவாக மாறிய பின்பு பலத்த ஹிட் அடித்த கதாபாத்திரம்.

1962 இல் ஆரம்பித்து, இதுவரை 24 படங்கள் வந்துள்ளது. 6 நபர்கள் ஜேம்ஸ் பாண்ட் ரோலில் நடித்துள்ளனர். டாக்டர் நோ படத்தில் முதல் முதலாக நடித்தவர் ஷான் கானரி . மேலும் ரஷ்யா வித் லவ், கோல்டுஃபிங்கர், தண்டர்பால், யு ஒன்லி லிவ் ட்வைஸ் மற்றும் டைமண்ட்ஸ் ஆர் ஃபார்எவர் ஆகிய படங்களில் ஜேம்ஸ் பாண்டாக நடித்தார்.

sean connery

50 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்த ஷான் கானரிக்கு தி அன்டச்சபிள்ஸ் படத்திற்காக 1988ம் ஆண்டு ஆஸ்கர் விருது கிடைத்தது.

பஹாமாஸில் தன் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவரின் உயிர் தூக்கத்திலேயே பிரிந்ததாக மகன் தெரிவித்துள்ளார். 90 வயதில் அவர் காலமானார்.

tweet

ஜேம்ஸ் பாண்ட் என்ற ரோலுக்கு உருவத்தையும் ஸ்டைலயும் கொடுத்தவர் இவர். பலரும் தங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து ட்வீட் செய்து கொண்டிருக்கிறார்கள்.

Continue Reading
To Top