அருப்புக்கோட்டையை சேர்ந்த மாணவி ஒருவர் அங்குள்ள பெண்கள் பள்ளி ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர்களின் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட அவர் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அவரது தந்தை அந்த மாணவியை இரண்டு நாட்கள் போராட்டத்துக்கு அழைத்து சென்றுள்ளார்.

இதனையடுத்து மூன்றாவது நாள் பள்ளியின் ஸ்பெஷல் வகுப்புக்கு செல்லாமல் வீட்டிற்கு தெரியாமல் தோழிகளையும் அழைத்துக்கொண்டு போராட்டத்துக்கு சென்றுள்ளார் அந்த மாணவி.

அதிகம் படித்தவை:  ஜல்லிக்கட்டு வழக்கில் நாளை வெளியாகிறது தீர்ப்பு? தமிழகத்தில் உச்சகட்ட பரபரப்பு

இதனை யாரோ வீடியோ எடுத்து வாட்ஸ் அப்பில் பரப்பியுள்ளனர். பின்னர் அனுமதி பெறாமல் போராட்டத்துக்கு சென்றதால் அவரது தந்தை அவரிடம் பேசாமல் கோபத்தில் இருந்துள்ளார்.

போராட்டம் முடிந்து பள்ளிக்கு சென்ற மாணவியிடம் ஏன் ஸ்பெஷல் வகுப்புக்கு வரவில்லை என்று பள்ளியில் ஆசிரியர் கேட்டிருக்கிறார். தோழிகளின் பெற்றோரும் நீ போறதுன்னா போயிருக்க வேண்டியதுதானே எதுக்கு எங்க பிள்ளைகளை கூட்டிட்டுப் போன என்று கோபமாக பேசியிருக்கிறார்கள்.

அதிகம் படித்தவை:  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி ஜனாதிபதிக்கு மார்க்கண்டேய கட்ஜூ கடிதம்

பெற்றோர், தோழியின் பெற்றோர், பள்ளியில் ஆசிரியர் என பலரும் பேசியதால் மனமுடைந்த அந்த மாணவி பள்ளியின் இரண்டாவது தளத்துக்குச் சென்று கீழே விழுந்து தற்கொலை செய்ய முயற்சித்திருக்கிறார்.பலரும் கெஞ்சியும் கேட்காத மாணவி அங்கிருந்து குதித்திருக்கிறார். இதில் முதுகு தண்டுவடத்தில் பலத்த அடிபட்டிருக்கிறது. மேலும் கை எலும்பு முறிந்து விட்டது.

( கவர் படம் – மாதிரிக்காக)