ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது தீவிரமாக தன் கருத்துக்களை பதிவு செய்தவர் RJ பாலாஜி. ஜல்லிக்கட்டுக்கான சட்டத்தை அரசு நிறைவேற்றிய பிறகு போராட்டத்தை வாபஸ் பெறவேண்டும் என ஒரு வேண்டுகோளாக அப்போது ஒரு வீடியோவில் கூறியிருந்தார்.

இது பற்றி தற்போது ஒரு பேட்டியில் RJ பாலாஜி பேசியுள்ளார். பல அதிகாரிகள், அரசியல் வாதிகள் தனக்கு போன் செய்து பேசியதாகவும், அவர்களுக்கு பயந்து அப்படி ஒரு வீடியோ பதிவிடவில்லை என கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  இதைத் தாண்டிதான் பெண்கள் வளர வேண்டும்... `செம’ நாயகியின் சுளீர் கருத்து

“முதலமைச்சர் உறுதி அளித்தபிறகு போராட்டம் நடத்தியதற்கான முக்கிய காரணம் நிறைவேறிவிட்டதாக எனக்கு தோன்றியது. அதனால் தான் ‘போராட்டம் முடிந்துவிட்டது என நான் நினைக்கிறேன், நீங்களும் நினைத்தால் வீட்டிற்கு செல்லுங்கள்’ என அந்த வீடியோவில் கூறினேன். பின்னர் இந்த போராட்டம் தொடர்ந்து நடந்தது… கலவரத்துடன் முடிந்தது.”

அதிகம் படித்தவை:  பேய் கெட்டப்பில் ஹார்ட்லே டேவிட்சன் பைக் ஓட்டும் ராய் லக்ஷ்மி. வைரலாகுது சிண்ட்ரெல்லா பட பர்ஸ்ட் லுக் போஸ்டர்.

“அந்த வீடியோவில் போராட்டம் முடிந்துவிட்டது என உறுதியாக சொல்லாதது தான் அப்போது நான் செய்த ஒரே தவறு” என RJ பாலாஜி மேலும் தெரிவித்துள்ளார்.