ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதனால் கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படவில்லை. ஜல்லிக்கட்டு மீதான தடை நீடிப்பதால் இந்த ஆண்டும் அதை நடத்த முடியாத நிலை.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி அளிக்கக் கோரி மாணவர்கள், இளைஞர்கள், அரசியல் கட்சியினர் என பல தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

வெளிநாடு வாழ் தமிழர்களும் அவரவர் இடங்களில் அமைதிப் பேரணி நடத்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டு குறித்து நடிகை குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

மடகாஸ்கர் நாட்டு ரூபாய் நோட்டில் ஜல்லிக்கட்டு புகைப்படம் உள்ளது. பீட்டா மற்றும் பிற ஆர்வலர்களுக்கு இது கண்ணுக்கு தெரியவில்லை..#SupportJallikattu என தெரிவித்துள்ளார்.