மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியம் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்திற்கு எதிரான வழக்கை திரும்பப் பெறும் நிலை ஏற்பட்டுள்ளது.

அதாவது , விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அவ்வமைப்பின் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,

‘தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை திரும்பப்பெற வேண்டும்.

மேலும் விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இதனால், ஜல்லிகட்டுக்கு எதிராக இனி எந்த வழக்கு தொடர்ந்தாலும், விலங்குகள் நல வாரியத்தின் ஒப்புதலை பெற்றுதான் வழக்கு தொடரமுடியும்.

எனவே ஏற்கனவே தொடரப்பட்ட வழக்கை கூட தற்போது வாபஸ் வாங்குவதற்கு அதிக சாத்திய கூறு உள்ளது கூறப்படுகிறது.