ஜல்லிக்கட்டு

தமிழர்களின் பாரம்பரியம் மற்றும் பெருமையை  உலகறிய செய்யும் முயற்சியாக, தமிழனின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு,வரும் 2018 இல் மலேசியாவில் நடைபெற உள்ளது.

மலேசியாவில்  வரும் ஜனவரி 7ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான அறிமுக விழா நேற்று  நடைபெற்றது.

கோலாலம்பூரில் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க உள்ளது. இதில் மலேசிய நாட்டில் இருக்கும் 20 காளைகள் பங்கேற்கின்றன. தமிழகத்தில் பயிற்சி பெற்ற 25 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டு காளைகளை அடக்க உள்ளனர். போட்டியைக் காண 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அமர்ந்து பார்க்கும் வகையில் திடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். ஆஸ்ட்ரோ உலகம் என்ற இணையதள தொலைக்காட்சியில் இப்போட்டி நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுமாம்.

அதிகம் படித்தவை:  இந்திய சினிமா வரலாற்றில் 'தெறி' ட்ரைலர் படைத்த சாதனை

தமிழக அமைச்சர் பாண்டியராஜன்,இயக்குனர் சமுத்திரகனி,  நடிகர் பரணி  உள்ளிட்டோர் பங்கேற்பார்கள் என்று கூறப்படுகிறது.

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்:

தமிழன்டா எந்நாளும் சொன்னாலே திமிரேறும்
காற்றோட கலந்தாலும் அதுதான் உன் அடையாளம்

அதிகம் படித்தவை:  எல்லா புகழும் எனக்கே! லாரன்ஸ் சிம்பு போட்டா போட்டி!

ஹே அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம்
மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம்
தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம்
உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்

தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
உன் மொழி சாயும் என்பானே
பாரிணைய தமிழனும் வருவான் தாய்த்தமிழ் தூக்கி நிற்பானே
கடைசித் தமிழனின் ரத்தம் எழும் வீழாதே …