fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

மனிதன் vs மிருகம்! ஜல்லிக்கட்டு மலையாள பட திரைவிமரசனம்.. தரமான உலக (வேற) லெவல் சினிமா

Reviews | விமர்சனங்கள்

மனிதன் vs மிருகம்! ஜல்லிக்கட்டு மலையாள பட திரைவிமரசனம்.. தரமான உலக (வேற) லெவல் சினிமா

மலையாள சினிமாவில் மிகவும் எதிர்பார்ப்புக்கு நடுவில் வெளியான படம் ஜல்லிக்கட்டு. அங்கு நெக்ஸ்ட் ஜென் இயக்குனராக கருதப்படும் லிஜோ ஜோஸ் பெலிசேரி இயக்கியுள்ள படம். ஹரிஷ் எழுதிய “மாவோயிஸ்ட்” என்ற கதையை அடிப்படையாக கொண்ட படம். இப்படத்தில் மாடு பிடிப்பது என்ற வீர விளையாட்டை பற்றி காட்டவில்லை, ஒரு கொடூர வேட்டையை நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளனர்.

கதை – மலை சார்ந்த காடு தான் கதைக்களம். வெவ்வேறு விதமான மனிதர்கள் வாழும் இடம். அவர்கள் அனைவரயும் இணைப்பது போன்ற இடமாக கசாப்பு கடை. செம்பன் வினோத், ஆந்தனி வர்கீஸ் இருவரையும் பிரதானப்படுத்தி நகர்கிறது கதை. எருமை ஒன்று வெட்டுவதற்கு முன் தப்பித்து தறிகெட்டு ஓடுகிறது. அதனை விரட்டி பிடிக்க இவர்கள் முற்பட, ஒவ்வொருவராக இணைந்து ஊரே அந்த மாட்டை துரத்தும் சூழல் ஏற்படுகிறது.

போலீஸின் தலையீடு, துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த என்ட்ரி கொடுக்கும் சாபுமோன் என கதை சூடு பிடிக்கிறது. ஒரு சூழலில் மாடு சிக்க வருகிறது இடைவேளை.

அந்த மாட்டை நான் தான் வெட்டுவேன் என நாயகன் (வில்லன் ??) அடம் பிடிக்க, ஊரார் ஒத்துழைக்க என திரைக்கதை வேறு பரிமாணம் எடுக்கிறது. ஊரில் இருக்கும் ஆட்களாக சில கதாபாத்திரங்களின் வாயிலாக காதல், காமம், க்ரோதம், தத்துவம், காமெடி, அரசியல், பெண்ணியம் என பல விஷயங்களை அங்கங்கே வைத்துள்ளார் இயக்குனர். அதிலும் குறிப்பாக குழந்தைகள், பெண்களை வீட்டின் உள்ளே வைத்துவிட்டு, ஆண்களை மட்டும் மையப்படுத்தி தான் மாடு பிடி வேட்டை நடக்கிறது. இறுதியில் மனித மிருகங்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்பதுடன் முடிகிறது படம்.

பிளஸ் – 95 நிமிடம் ஓடும் நேரம் உள்ள படம். பிரசாந்த் பிள்ளையின் இசை. கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு, திரைக்கதை, கதாபாத்திர அமைப்பு அனைத்துமே ஸ்பெஷல். நம்மையும் அந்த காட்டினுள் கொண்டு சென்று ஓரு கட்டத்தில் மிருகத்திற்காக பரிதாபப்பட வைத்ததே இந்த டீம்மின் பிளஸ். மொழி தெரியாதவர்களுக்கு கூட படம் புரியும் வகையில் உள்ளது.

மைனஸ் – இந்தியா முழுக்க பிற மொழிகளில் டப் செய்து அல்லது subtitle உடன் ரிலீஸ் செய்திருந்தால் இப்படத்திற்கு நல்ல ரீச் கிடைத்திருக்கும். படம் உலக சினிமா மற்றும் மல்ட்டிப்ளெக்ஸ் ரசிகர்களை தான் வெகுவாக கவரும்.

சினிமாபேட்டை வெர்டிக்ட்– மலையாள சினிமா என்ற நிலையை கடந்து, இந்திய சினிமா கொண்டாட பட வேண்டிய படம் இது. இப்படத்திற்கான அங்கீகாரம் உலகளவில் கிடைத்து விட்டது. நம் இந்தியாவில் என்ன ஸ்டேட்டஸ் என்பது போக போகவே தெரியும்.

மிருகத்தை விட கொடூரமானவன் இந்த இரண்டு கால் மனிதமிருகம் என்ற மெஸேஜை சொல்லும் படமே இது. ஹாலிவுட்டில் ரிலீஸ் ஆகியிருந்தால் கொண்டாடும் நம் மக்கள், இப்படத்திற்கு கட்டாயம் நல்ல வரவேற்பு தருவார்கள் என நம்புவோமாக.

சினிமாபேட்டை ரேட்டிங் 4/5.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top