ஒரிஜினல் சக்சசை ரகசியமாய் கொண்டாடிய ஜெயிலர் படக்குழு.. ஊருக்கு உபதேசம் செய்துவிட்டு ரஜினி பார்த்த வேலை

Jailer Success Meet: தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் ஒரு படம் ரிலீஸ் ஆகி ஒன்றிரண்டு நாட்களிலேயே அதற்கு சக்சஸ் மீட் வைத்து விடுகிறார்கள். படம் நெகட்டிவ் கமெண்ட், பிளாப் என தெரிந்தும் கூட நிறைய படக்குழுக்கள் கேக் வெட்டி கொண்டாடியதும் உண்டு. அப்படி இருக்கும் பட்சத்தில் தமிழ் சினிமாவை ஆட்டம் காண வைத்து இருப்பது தான் ஜெயிலர் படத்தின் வசூல் வெற்றி.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட்டய கிளப்பிய ஜெயிலர் படம், கடந்த சில வருடங்களில் ரஜினிக்கு கிடைக்காத வெற்றியை கொடுத்திருக்கிறது. இந்த வெற்றி சந்தோஷத்தில் ஒட்டுமொத்த படக்குழுவும் திக்கு முக்காடி போய் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். கடந்த வாரம் படத்தின் சக்சஸ் பார்ட்டி நடைபெற்றதாக ஒரு சில புகைப்படங்கள் வெளியாகின.

Also Read:அம்மாடியோ! ஜெயிலர் ஓடிடி உரிமை இத்தனை கோடியா.? தட்டி தூக்கிய நிறுவனம், ரிலீசில் ஏற்பட்ட சிக்கல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பட குழுவுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடுவது போல் ரொம்பவும் சிம்பிளாக அந்த பார்ட்டி தெரிந்தது. ஆனால் உண்மையில் ஒரிஜினல் சக்சஸ் பார்ட்டி நடந்த இடமே வேறு. சென்னையில் சோமர் செட் என்னும் ஹோட்டலில் இந்த பார்ட்டி நடைபெற்று இருக்கிறது. இந்த ஹோட்டலில் ரேடியோ ரூம் என்று ஒரு பார் இருக்கிறதாம்.

இந்த பாரில் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் கால்படாத இடமே இல்லை என்று சொல்கிறார்கள். இங்கு தான் ஜெயிலர் படத்தின் ஒரிஜினல் சக்சஸ் பார்ட்டியை கொண்டாடி இருக்கிறது படக்குழு. இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தது சன் பிக்சர்ஸ் நிறுவனம் தானாம். மேலும் பார்ட்டிக்கு முதல் அழைப்பு தலைவருக்குத்தான் சென்றிருக்கிறது.

Also Read:18வது நாள் கடந்து ஜெயிலர் செய்த மொத்த வசூல் ரிப்போர்ட்.. தனிக்காட்டு ராஜாவாக ஆட்டம் போடும் ரஜினி

தலைவர் எங்கே இது போன்ற பாருக்கு எல்லாம் வரப்போகிறார் என்று நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு திடீர் விசிட் அடித்து இன்ப அதிர்ச்சியை கொடுத்து இருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். குடிக்காதீங்க என ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த ரஜினி அந்த இடத்திற்கு சென்றது எல்லோருக்கும் கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்திருக்கிறது.

இது போன்ற சந்தோஷமான நிகழ்வுகளில் படக்குழுவுடன் இருக்க வேண்டும் என விரும்பிய ரஜினிகாந்த் அங்கு சென்று இருக்கிறார். இருந்தாலும் குடிக்கிற இடம் பக்கம் தன் கண்ணை கூட திருப்பவில்லையாம். பார்ட்டியில் மட்டுமே கலந்து கொண்டு இருக்கிறார். எப்படி இருந்தாலும் ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்துவிட்டு ரஜினி அந்த இடத்திற்கு சென்றது ஊருக்கு மட்டும் தான் உபதேசம் என்பது போல் இப்போது ஆகிவிட்டது.

Also Read:திருட்டு காசுல படம் எடுக்கிற தங்கர் பச்சான் , ரஜினிய பத்தி பேசுன நாரடிச்சிடுவோம்.. எரிமலையாக வெடித்த பயில்வான்

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்