புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

பல கோடிகளில் குளித்த சூப்பர் ஸ்டார்களுக்கு மத்தியில் ஏமாந்து போன வினாயகன்.. சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடித்த மாறன்

Jailer Movie Actor Salary: நெல்சன்- ரஜினி கூட்டணியில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியான ஜெயிலர் படம் உலகம் முழுவதும் தொடர்ந்து வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் மாறன் என்ற முரட்டு  வில்லன் கேரக்டரில் நடித்த வினாயனுக்கு மிகக் குறைந்த சம்பளத்தை கொடுத்து ஏமாற்றி விட்டனர்.

தன்னுடைய மலையாளம் கலந்த வசனத்தாலும் மிரட்டும், கொடூர தோற்றத்தாலும் ஜெயிலர் படத்தில் பெயர் வாங்கியவர்  நடிகர் வினாயகன். கேரளாவில் பிறந்த இவர் மலையாள நடிகராக தமிழில் நிறைய படங்கள் நடித்திருக்கிறார். அதிலும் திமிரு, மரியான் போன்ற படங்களில் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் நன்றாகவே பரிட்சையமானவர்.

Also Read: ரஜினி, கமல் இடத்தை பிடிக்கும் அடுத்த தலைமுறை நடிகர்கள்.. பட்டமே வேண்டாம் என்று ஒதுங்கும் அஜித்

இவர் தமிழில் நான்கு ஐந்து படங்களில் நடித்தாலும் இந்த படம் இவரை எங்கேயோ கொண்டு போய் உள்ளது. ஜெயிலர் படத்தில் பல ஜாம்பவான்கள் இணைந்து நடித்தாலும் இந்த படத்தில் கொடூர வில்லனாக நடித்த வினாயகன் படத்தில் மலையாள நெடி வீசும் படி டயலாக் பேசி இருக்கிறார். ஏனென்றால் இந்த படத்தில் அவர் ஒரு பக்கா மலையாளியாகவே மிரட்டி இருக்கிறார்.

ஆனால் அப்படி ஒரு ஸ்ட்ராங்கான கேரக்டரில் நடித்த இவருக்கு சொற்ப  சம்பளத்தை தான் கொடுத்திருக்கிறார்கள். இந்த படத்தில் இவர் வாங்கிய சம்பளம் மிக மிக கம்மிதான். கெஸ்ட் ரோலில் நடித்த மலையாள சூப்பர் மோகன்லால் 8 கோடி,  கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் 5 கோடி என  கோடிகளில் குளித்த நடிகர்களுக்கிடையே வினாயகன் வாங்கியது மிக மிக கம்மியான சம்பளம்.

Also Read: ஜெயிலர் வெற்றியால் பரபரப்பாகும் ரஜினியின் கால்ஷீட்.. 2024 பிப்ரவரிக்குள் 2 படத்தை ரிலீஸ் பண்ண போட்ட பிளான்

இவர் இந்த ஜெயிலர் படத்தில் மிரட்டியதன் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் குவியும். ஒரு வழியா சின்ன மீனை போட்டு பெரிய மீனை பிடித்து விட்டார் என்றே சொல்லலாம். இவர் இந்த படத்தில் வேண்டுமானால் சம்பளத்தை கம்மியாக வாங்கி இருக்கலாம், ஆனால் அடுத்தடுத்த படங்களில் அப்படி இருக்காது.

அனேகமாக இவர் அடுத்த படத்திற்கு ஒரு கோடி வரை சம்பளம் ஏற்றி விடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவிற்கு இவருடைய மார்க்கெட் எகிறி விட்டது. ஆனால் 6 நாட்களில் 400 கோடியை வாரி குவித்திருக்கும் ஜெயிலர் படத்திற்காக விநாயகம் பெரும் பங்காற்றி இருக்கிறார். ஆனால் அவர் அந்த படத்திற்காக வாங்கிய சம்பளம் வெறும் 35 லட்சம்  தான்.

Also Read: மூணு மாச கடன் நான்கே நாளில் திருப்பிக் கொடுத்த ரஜினி.. நீங்க கடவுளுக்கும் மேல என புகழும் பிரபலம்

- Advertisement -spot_img

Trending News