ஜெய்பீம், பரியேறும் பெருமாள் படங்களை பாராட்டாத ரஜினி.. ஆனா இப்படி ஒரு இடியாப்ப சிக்கல் இருக்கே

கோலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாகவே இளம் நடிகர் மற்றும் இயக்குனர்களை ஊக்குவிக்கும் விதமாக அவர்களின் படங்களை பார்த்து விட்டு அவர்களை தொலைபேசியில் தொடர்புகொண்டு பாராட்டி வருகிறார். இவரின் பாராட்டால் அந்த படக்குழுவினரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அந்த வகையில் ரஜினிகாந்த் சமீபத்தில் வெளியான மாநாடு, ராக்கி போன்ற படங்களை பார்த்துவிட்டு அந்த படக்குழுவினர்களை தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். அதேபோல் இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ரைட்டர் படத்தை பார்த்த ரஜினி அவர்களை புகழ்ந்து தள்ளி விட்டார்.

அவ்வளவு ஏன் பாலிவுட்டில் வெளியான 83 படத்தை கூட அப்படி புகழ்ந்தார். ஆனால் தமிழில் வெளியாகி நல்ல வெற்றி பெற்று நல்ல விமர்சனங்களையும் பெற்ற இரண்டு படங்களை மட்டும் ரஜினி நற் வரை பாராட்டவே இல்லை. அனைவரையும் பாராட்டிய ரஜினி இவர்களை மட்டும் ஏன் பாராட்டவில்லை என ரசிகர்கள் மனதில் ஒரு கேள்வி எப்போதும் ஓடிக்கொண்டு இருந்தது.

தற்போது அதற்கான பதிலும் கிடைத்துள்ளது. அதாவது இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர் நடிப்பில் வெளியான பரியேறும் பெருமாள் படமும் சரி, ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படமும் சரி இரண்டு படங்களுமே சாதிப்பிரச்சனையை மையமாக கொண்டு உருவான படங்கள் தான். அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு படங்களும் சர்ச்சைகளில் சிக்கியது.

இருப்பினும் படங்கள் விமர்சன ரீதியாக நல்ல வெற்றியே பெற்றன. ஆனால் சர்ச்சை காரணமாக இந்த படங்களுக்கு நாம் ஏதாவது கருத்து சொல்ல நமக்கு பிடிக்காதவர்கள் அதையே ஒரு பிரச்சனையாக மாற்றி விடுவார்கள் என்ற பயத்தினால் தான் ரஜினி இந்த படங்களுக்கு எந்த கருத்தும் கூறவில்லையாம்.

நமக்கு நம்ம பாதுகாப்பு தான் முக்கியம் என நினைத்து விட்டார் போல. இருந்தாலும் சமூகத்தில் நடக்கும் அவலங்களை வெளிப்படையாக கொண்டுவருவதற்கு இதுபோன்ற இயக்குனர்களுக்கு தைரியம் கொடுத்து தூக்கி விட வேண்டும் முன்னணி நடிகர்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்

பிரபலமான செய்திகள்