ஜெய் பீம் படம் போல் மற்றுமொரு உண்மை சம்பவம்.. அதிர்ந்துபோன கோலிவுட்

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் ஜெய் பீம். இருளர் இனத்தில் போராடும் மக்களை பிரச்சனையை வெளிக்கொண்டு வரும் வகையில் இப்படம் இருந்தது. இப்படத்தில் கர்ப்பிணியாக உள்ள பெண் தன் கணவன் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதற்கு எதிராக போராடுகிறார்.

அப்பெண்ணுக்கு உதவியாக வழக்கறிஞர் சந்துருவாக சூர்யா நடித்து இருந்தார். இதுபோன்ற உண்மை சம்பவங்களை படமாக எடுக்கப்படுவது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தை பார்த்த முன்னாள் மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் தன்னுடைய முகநூலில் ஒரு பதிவை வெளியிட்டு இருந்தார். இவர் கேரள மாநிலத்தில் மாவட்ட ஆட்சியராக பணியாற்றியுள்ளார்.

அவர் பணியாற்றும்போது 15 ஆண்டுகளாக அரசே தீர்க்கமுடியாத ஆதிவாசி மக்களின் பிரச்சினையை தீர்த்து வைத்துள்ளாராம். கிராமத்தில் சிம்மினி அணை கட்டுவதற்காக 17 ஆதிவாசி குடும்பங்களில் அங்கிருந்து அரசு வெளியேற்றியுள்ளது. மலைவாழ் மக்களின் ஆதாரமாக உள்ள நில பிரச்சனையை மாவட்ட ஆட்சியர் தீர்த்து வைத்துள்ளார். அன்று 17 குடும்பமாக இருந்தவர்கள், பிறகு 37 குடும்பமாக ஆகிவிட்டார்கள்.

ஆதிவாசிகள் சிம்மினி அணை திறக்கும் போது உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட்டார்கள். இதனால் மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் ஆதிவாசி மக்களிடம் ஏதோ உண்மை உள்ளது என்பதை அறிந்து சிம்மினி அணையின் பைலை படிக்க தொடங்கினார். அதில் நான்கு பக்கங்கள் காணாமல் போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் ஆதிவாசிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலத்தின் பக்கங்கள்தான் காணாமல் போய்விட்டது என்பதை அறிந்தார்.

சிம்மினி அணை திறக்க விடாமல் ஆதிவாசி மக்கள் பிரச்சனை செய்து வந்தார்கள். என்ன செய்வது என்று தெரியாமல் அப்போது இருந்த முதலமைச்சர் குழம்பி இருந்தார். மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் முதலமைச்சரிடம் சென்று மூன்று லட்சம் தாருங்கள் நான் இந்த பிரச்சினையை முடித்து வைக்கிறேன் என்று கூறுகிறார். முதலமைச்சரும் மாவட்ட ஆட்சியரிடம் 3 லட்சம் தந்து உள்ளார்.

ஞானசேகரன் ஆதிவாசி மக்களிடம் சென்று அரசின் சிக்கலை புரியவைத்து உங்களது 37 குடும்பத்திற்கும் நானே பூமி வாங்கி எல்லோருக்கும் சவுகரியமாக வீடு கட்டித் தருகிறேன் என்றார். பின்பு 37 குடும்பங்களுக்கும் தாசில்தார் கையால் பட்டாக்கள் வழங்கப்பட்டது. இவர்களது 15 வருட போராட்டங்களை மாவட்ட ஆட்சியர் ஞானசேகரன் தீர்த்து வைத்துள்ளார்.

ஜெய்பீம் படத்தால் பல கஷ்டப்படும் மக்களின் கதைகள் தற்போது வெளியே வந்துள்ளது. ஜெய் பீம் படம் வெளியானதற்கு பிறகு இருளர் இன மக்களிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் உதவி செய்துள்ளார். ஜெய்பீம் போன்ற நல்ல படங்கள் எப்போதும் வரவேண்டும் என ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்