சசிகுமாரால் மொத்த கேரியரும் போச்சு.. கண்ணீர் விட்டு கதறும் நடிகர்

ஒரு சில படங்களிலேயே மக்கள் மனதில் இடம் பிடித்த சில ஹீரோக்கள் அதன்பிறகு இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள். அப்படி பகவதி படத்தில் விஜய்யின் தம்பியாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். வெங்கட்பிரபுவின் சென்னை 600018 படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

இதைத்தொடர்ந்து சுப்பிரமணியபுரம், சரோஜா, கோவா, எங்கேயும் எப்போதும், திருமணம் எனும் நிக்கா, ராஜா ராணி போன்ற ஹிட் படங்களையும் ஜெய் கொடுத்துள்ளார். ஆனால் தற்போது வரை தமிழ் சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை ஜெயினால் பிடிக்க முடியவில்லை.

இந்நிலையில் தற்போதும் பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதாவது குற்றம் குற்றமே, பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக, காக்கி, காபி வித் காதல் போன்ற படங்களில் ஜெய் நடிக்கிறார். இந்நிலையில் ஜெய்யின் பட்டாம்பூச்சி படம் இந்த மாதம் வெளியாக உள்ளது. இப்படத்தில் சுந்தர் சி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் ஜெய் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், அவள் பெயர் தமிழரசி, கனிமொழி போன்ற படங்களை தேர்ந்தெடுத்து நடித்ததன் காரணம் என்ன என ஜெய்யிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெய், இதற்கு முன்னதாக சுப்பிரமணியபுரம் படத்தில் சசிகுமாருடன் பணியாற்றி இருந்தேன்.

அவருடன் தான் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டு பயணித்தேன். இதனால் இதுபோன்ற வித்தியாசமான கதைகளில் நடிக்கலாம் என கமர்ஷியல் படங்களை தவிர்த்து இருந்தேன். மேலும் சுப்பிரமணியம் படத்தின்போது எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. ஆனால் சுப்பிரமணியபுரம் படத்தில் நான் தாடியுடன் இருந்ததால் மற்ற படங்களில் என்னால் நடிக்க முடியாமல் போனது.

மேலும் சுப்பிரமணியபுரம் படத்தை தொடர்ந்த நாடோடிகள் படத்தில் நடிக்க வேண்டியிருந்தது. ஜீவா நடிப்பில் வெளியான சிவா மனசுல சக்தி படத்திலும் எனக்கு தான் முதல் வாய்ப்பு வந்தது. அப்போதே கொஞ்சம் யோசித்த நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்திருந்தால் இன்று பெரிய அளவில் அங்கீகாரம் கிடைத்து இருக்கும் என ஜெய் வருந்தியுள்ளார்.

Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்