Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஜெய், வாணிபோஜன் நெருக்கமான ரொமான்ஸ், (18+) வசனங்கள்.. TRIBLES வெப் சீரிஸ் விமர்சனம்
கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் ஜெய் மற்றும் வாணி போஜன் நடிப்பில் ஹாட்ஸ்டார் OTT தளத்திற்காக உருவாகி சமீபத்தில் ஹிட்டடித்த வெப்சீரிஸ் டிரிபில்ஸ்(TRIBLES). இந்த வெப்சீரிஸ் பற்றிய விமர்சனம் கீழே:
ஆரம்பமே வழக்கமாக இளைஞர்கள் மத்தியில் வரும் படங்களை போல திருமணமாகி விவாகரத்து பெற்று மீண்டும் இரண்டாவது திருமணத்திற்கு ரெடியாகும் ஹீரோ தன்னுடைய முதல் காதலை நினைத்து பார்ப்பது போலதான்.
ஒரு ஐடி கம்பெனி ஊழியராக இருக்கிறார் வாணி போஜன். ஜெய் எப்படியாவது ஒரு ஐடி கம்பெனியில் காபி ஷாப் ஓபன் செய்து விட வேண்டும் என்ற கனவுடன் இருந்து வருகிறார். அதற்காக ஒரு பிரபல ரவுடியிடம் 20 லட்சம் கடன் வாங்கி வாணிபோஜன் இருக்கும் அதே ஐடி கம்பெனியில் ஒரு காபி ஷாப் ஓபன் செய்கிறார். ஜெய்க்கு துணையாக நடிகர்கள் விவேக் பிரசன்னா மற்றும் ராஜ்குமார் உடன் இருக்கின்றனர்.
வழக்கம்போல் உயர்பதவியில் இருக்கும் வாணிபோஜனிடம் சின்னச் சின்ன சில்மிஷம் செய்து அவரை தன்னுடைய காதல் வலையில் விழ வைக்கிறார் ஜெய். ஒரு சமயத்தில் காதல் முற்ற இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருவருக்குமான காதல் போர்ஷன்கள் பார்ப்பவர்களை கொஞ்சம் நெளிய வைக்கும் படி ரொமான்ஸ் அதிகமாகவே இருக்கிறது. நண்பர்களுடன் காமெடி கலாட்டாக்களும் அனைவரையும் கலகலப்பாக்குகிறது.
திருமணத்திற்கு பிறகு சில வருடங்களாகியும் வாணிபோஜனுக்கு குழந்தை இல்லாததால் வீட்டில் பிரச்சனை கிளம்புகிறது. குழந்தை பிறக்காது அதற்கு காரணம் ஜெய்யிடம் உள்ள குறை தான் என்பது தெரிய வருகிறது. இதனால் ஜெய் வாணிபோஜன் வாழ்க்கை கெட்டு விடக் கூடாது என்பதற்காக வேண்டுமென்றே அவருடன் பிரச்சனை செய்து அவரை விட்டு விலகுகிறார் ஜெய்.
அந்த சமயத்தில்தான் இரண்டாவது காதலி என்ட்ரி கொடுக்கிறார். வாணி போஜனை விலக்கி வைத்துவிட்டு புதிய காதலியுடன் கைகோர்க்கிறார் ஜெய். அவர்கள் இருவருக்கும் காதல் துளிர் விட, அதையே பெரிய பிரச்சனையாக மாற்றி ஜெய், வாணிபோஜனை விவாகரத்து செய்கிறார். இந்நிலையில் இரண்டாவது காதலிக்கும் ஜெயிக்கும் திருமண முடிவு செய்யப்படுகிறது. விவாகரத்து பெற்ற இரண்டே வாரத்தில் அடுத்த கல்யாணத்துக்கு ரெடியான ஜெய் கல்யாணத்தை கெடுக்க மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார் வாணி போஜன்.
வாணி போஜன் வந்தால் பிரச்சனையாகும் என தெரிந்த நண்பர்கள் இருவரும் அவரை ஒரு ஹோட்டல் அறையில் தங்க வைக்கின்றனர். அங்குதான் வாணி போஜன் கர்ப்பமாக இருக்கும் விஷயம் தெரியவருகிறது. இதனால் இரண்டு நண்பர்களும் சேர்ந்து எப்படி கல்யாணத்தை தடுத்து நிறுத்துகிறார்கள். இவர்களுடன் விவேக் பிரசன்னா மனைவியாக நடித்த நாயகியும் காமெடியில் ஸ்கோர் செய்கிறார்.
ஜெய்க்கு இரண்டாம் கல்யாணம் என்பது புதிய காதலியின் குடும்பத்திற்கு தெரிய வர கல்யாணத்தை நிறுத்து கின்றனர். இதற்கிடையில் காபி ஷாப்பில் வேலை பார்க்கும் நபர் கடன் கொடுக்க வைத்திருந்த 20 லட்சத்தை எடுத்து காதலியுடன் கோவாவுக்கு சென்று விடுகிறார். அந்த இளம்பெண் பிரபல அரசியல்வாதியின் மகளாகவும் இருக்கிறார். கோவாவுக்கு சென்ற அந்த ஜோடி அந்த ரவுடியிடம் சிக்கிக்கொள்ள இன்னும் சுவாரசியம் எடுக்கிறது கதை.
ரவுடி பணம் கேட்டு மிரட்ட அந்த காதல் ஜோடியை பிடித்தால்தான் ரவுடி பிரச்சனையும், கடையை காலி செய்யச் சொன்ன கம்பெனி பிரச்சனையும் முடிவுக்கு வரும் என அவர்கள் கோவாவில் இருப்பதை கண்டுபிடித்து அவர்களை இழுத்துச் ஜெய் மற்றும் அவரது நண்பர்கள் செல்கின்றனர். மேலும் இரண்டாவது காதலி வீட்டில் புதிய திருமணத்திற்கு ஏற்பாடு செய்ய அவரையும் கிளம்பி கோவாவுக்கு வரச் சொல்கிறார் ஜெய்.
இதனால் ஒரு பக்கம் அரசியல்வாதி தொல்லை, ஒரு பக்கம் கடன் கொடுத்த ரவுடி தொல்லை, புதிய காதலி வீட்டு பிரச்சனை என கதை விறுவிறுப்பாகவும் காமெடியாகவும் நகருகிறது. இறுதியில் வாணி போஜன் கர்ப்பமாக இருப்பது தெரியவந்து இரண்டாவது காதலி ஜெய்யை விட்டுப் பிரிந்து செல்கிறார். இறுதியில் மீண்டும் ஜெய் வாணிபூஜன் இருவரும் ஒன்று சேர்ந்து விடுகின்றனர்.
எல்லாம் சரியாக இருந்தாலும் இளைஞர்களை கவர்வதற்காக எடுக்கப்பட்ட இந்தப் வெப்சீரிஸில் கொஞ்சம் அருவருக்கத்தக்க வசனங்கள் இடம் பெற்றுள்ளதையும் குறிப்பிடப் வேண்டியிருக்கிறது. இனி இதுபோன்ற வெப்சீரிஸ்களை அடிக்கடி தமிழில் எதிர்பார்க்கலாம்.

tribles-webseries
