அண்ணே, நம்ம படம் தியேட்டர்ல ஓடாது, பேசாம OTTக்கு போயிடலாம்.. இயக்குனருக்கு ஐடியா கொடுத்த ஜெய்

தமிழ் சினிமாவில் இவரெல்லாம் நன்றாக வருவார் என எதிர்பார்த்து வீணாப்போன நடிகர்கள் பலர் இருக்கின்றனர். அந்த வரிசையில் முதலிடம் நம்ம நடிகர் ஜெய்க்கு தான் தர வேண்டும்.

ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களில் நடித்து வந்த ஜெய் யார் பேச்சை கேட்டுக்கொண்டு இப்படியெல்லாம் செய்கிறார் என்பதுதான் தெரியவில்லை. கடைசியாக அவரது நடிப்பில் வெளியான ஒரு படம் கூட சரியில்லை.

அதனால் தற்போது பட வாய்ப்புகள், வெப் சீரிஸ் வாய்ப்புகள் என எது வந்தாலும் நடிக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அந்தவகையில் அடுத்ததாக சுசீந்திரன் இயக்கத்தில் குற்றமே குற்றம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

சுசீந்திரன் கதையும் ஏறக்குறைய ஜெய் போன்றதுதான். ஆரம்பத்தில் எதார்த்தமான கதைகளில் பல வெற்றி படங்களை கொடுத்து வந்த சுசீந்திரன் தற்போது ஒரு வெற்றி கொடுத்தே நடமாடிக் கொண்டிருக்கிறார்.

அதுவும் கடைசியாக வெளியான அவரது படங்கள் அனைத்துமே பார்க்கும் ரசிகர்களை கடுப்பேற்றும் அளவுக்கு படுமொக்கையாக இருந்து வருகிறது. சுசீந்திரன் அதிகப் படங்கள் எடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடைய தனித்தன்மையை இழந்து வருகிறாரா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

சுசீந்திரன் மற்றும் ஜெய் கூட்டணியில் இரண்டு படங்கள் உருவாகியுள்ளன. அதில் ஒரு படமான குற்றமே குற்றம் திரைப்படம் நேரடியாக OTTயில் வெளியாக உள்ளதாம். பெரிய படங்களே தியேட்டரில் ஒரு வாரம் கூட தாங்குவதில்லை, இதனால் தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவேண்டாம் என ஜெய் சுசீந்திரனுக்கு ஐடியா கொடுத்ததாக தெரிகிறது.

jai-cinemapettai
jai-cinemapettai
Sharing Is Caring:

சமீபத்திய சினிமா செய்திகள்