சென்னையில் பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் ஜெய், பிரேம்ஜி அமரன் காயமின்றி உயிர்தப்பினர். நடிகர் ஜெய், பிரேம்ஜி அமரன் இருவரும் சென்னை 28, கோவா, நவீன சரஸ்வதி சபதம், சென்னை 28-II உள்ளிட்ட சில படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

நடிகர் ஜெய் ஓட்டிய கார் சென்னை அடையாறு பாலம் மீது மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த ஜெய் மற்றும் பிரேம்ஜி இருவரும் காயமின்றி தப்பினர். கார் சேதமடைந்துள்ளது.

அதிகம் படித்தவை:  சோனா போச்சு! ரம்யா வந்திச்சு! ஹிஹிஹி…

ஜெய் நிதானம் இன்றி இருந்ததால் கார் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து ரூ500 அபராதம் வசூலித்த பின் ஜெய்யை போலீசார் விடுவித்தனர். வெங்கட்பிரபு இயக்கி வரும் படம் பார்ட்டி.premji-ramya

இதில் ஜெய், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், ரெஜினா கெசன்ட்ரா, நிவேதா பெத்துராஜ், சஞ்சிதா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு பிரேம்ஜி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு பிஜி தீவில் முடிந்து நேற்று சென்னை திரும்பினர்.

அதிகம் படித்தவை:  ஜெய் மீது இத்தனை வழக்கா..!!!, சிறைத்தண்டனைக்கு அதிக வாய்ப்பு..!

இந்நிலையில் இன்று நடிகர் ஜெய், மற்றும் பிரேம்ஜி இருவரும் காரில் சென்று கொண்டிருந்த போது அடையாறு பாலம் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நிதானம் இன்றி கார் ஓட்டி இதற்கு முன்பும் நடிகர் ஜெய் விபத்து ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.