பவர்’, ‘சர்தார் கப்பர் சிங்’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.எஸ்.ரவீந்திரா. அவர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் ‘ஜெய் லவ குசா’ படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் ஜெய், லவ குமார் மற்றும் குசா ஆகிய ரோல்களில் நடித்திருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர்.

டோலிவுட்டில் ‘ஜனதா கேரேஜ்’ படத்தின் வெற்றிக்கு பிறகு ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் ‘ஜெய் லவ குசா’. இதில் ‘யங் டைகர்’ ஜூனியர் என்.டி.ஆர் முதன் முறையாக ட்ரிபிள் ஆக்ஷனில் நடித்திருந்தார் ஜூனியர் என்.டி.ஆர் மூன்று வேடங்களில் நடித்து வெளியானது.

திக்குவாய் கொண்ட இளைஞராக ஒரு எதிர்மறை கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இது ஜூனியர் என்.டி.ஆரின் 27-வது படமாம். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ், ராஷி கண்ணா என டபுள் ஹீரோயின்ஸ் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தின் டீசர் முன்னாடி இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. “அந்த ராவணன கொல்றதுக்கு கடல் தாண்டிப் போகணும். இந்த ராவணனைக் கொல்ல கடல் அளவு தைரியம் இருக்கணும்” என ஜூனியர் என்.டி.ஆர் பன்ச் டயலாக் பேசும்படி மாஸாக இருந்தது டீசர் இந்த பன்ச் டயலாக்  ரசிகர்கள் அனைவருக்கும் ஒரு நல்ல விருந்தாக அமைந்த்தது .

ஜெய் லவ குசா டீசர் வெளியாகி 17,000,822 பார்வையாளரை கடதுள்ளது மேலும் 254k லைக்ஸ் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தை ஜூனியர் என்.டி.ஆரின் சகோதரர், நந்தமுரி கல்யாண்ராம் என்.டி.ஆர் என்ற பேனரில் தயாரித்திருந்தார்.

‘என்.டி.ஆர் ஆர்ட்ஸ்’ நிறுவனம் சார்பில் கல்யாண் ராம் மிக பிரம்மாண்டமாக தயாரித்திருந்த இதனை கே.எஸ்.ரவீந்திரா இயக்கியிருந்தார். ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த இதற்கு சோட்டா.கே.நாயுடு ஒளிப்பதிவு செய்திருந்தார், கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் படத்தொகுப்பாளராக பணியாற்றியிருந்தார். இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் குறித்து ஜீனியர் என்.டி.ஆர் தனது ட்விட்டர் பக்கத்தில் “‘ஜெய் லவ குசா’ படத்தின் வரவேற்பு திருப்தியளிக்கிறது. ஒரு நடிகனாக இதை விட எதை எதிர்பார்க்க முடியும்? ‘ஜெய் லவ குசா’ குழுவின் சார்பில் அனைவருக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடி வருகிறது. இந்த படம் ரிலீஸாகி 6 நாட்களில் மட்டுமே .  பாக்ஸ் ஆஃபீஸில் ரூ.100 கோடிக்கு மேல் கல்லா கட்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது மேலும் இன்னும் வசூலில் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதை படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான கல்யாண் ராமே தனது டிவிட்டர் பக்கத்தில் புதிய போஸ்டரை ஷேரிட்டு உறுதிபடுத்தியுள்ளார்.