fbpx
Connect with us

Cinemapettai

மீண்டும் தமிழ் நடிகருடன் இணையும் சன்னிலியோன்.!

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மீண்டும் தமிழ் நடிகருடன் இணையும் சன்னிலியோன்.!

தமிழ் சினிமாவில் பகவதி படத்தின் மூலம் அறிமுகமானவர் ஜெய். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் சென்னை 600028 ,சுப்பிரமணியபுரம், சரோஜா ,கோ, எங்கேயும் எப்போதும், ராஜா ராணி, மாஸ் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். அதில் சில படங்கள் சிறப்பு தோற்றத்திலும் நடித்துள்ளார்.

நடிகர் ஜெய் வடகறி படத்தின் மூலம் சன்னிலியோன் கூட நடனம் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. அதன்மூலம் சன்னி லியோன் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தற்போது மலையாள திரை உலகிலும் ஜெய்யுடன் தான் அறிமுகமாக உள்ளார் சன்னி லியோன்.

அதாவது மதுர ராஜா எனும் படத்தில் மம்முட்டி நடித்து வருகிறார். அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ஜெய்யும் நடித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் நடித்த  படத்தில் ஒரு  பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார் இதன்மூலம் மலையாளத் திரையுலகிலும் சன்னிலியோன் அறிமுகமாகியுள்ளார். என்னதான் சன்னி லியோன் தமிழ் மலையாளத்தில் அறிமுகமானாலும் ஜெய்யுடன் தானே அறிமுகமாகி உள்ளார் என கூறி வருகின்றனர்.  

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top