நிதின் சத்யாவின் ஷ்வேத் நிறுவனமும், பத்ரி கஸ்தூரியின் ‘ஷ்ரத்தா என்டர்டெயின்மென்டு’ம் இணைந்து தயாரிக்கும் படம் தான் “ஜருகண்டி”. இந்த படத்தை வெங்கட் பிரபுவின் உதவியாளர் பிச்சுமணி இயக்குகிறார்.

jarugandi jai

இந்த படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மலையாள நடிகை ரேபா ஜான்( மலையாளத்தில் வெளியான ஜாக்கோபினிடே ஸ்வரங்கள் படத்தில் நடித்தவர்) அறிமுகமாகிறார். இவர்களுடன் ‘ரோபோ’ சங்கர், டேனி, ‘சிறுத்தை’ அமித், இளவரசு, ‘மைம்’ கோபி ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். போபோ சஷி இசை அமைக்கிறார். ஒளிப்பதிவு பொறுப்பை அர்வி ஏற்றுள்ளார். படத்தொகுப்பை கே.எல்.பிரவீன் கவனிக்கிறார்.

jarugandi teaser

இந்நிலையில் இப்படத்தின் டீசரை இன்று மாலை 5 மணிக்கு சூர்யா தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.