jai-chennai-

jai-chennai-28வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 பார்ட் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த அனைவரும் இதிலும் இணைந்து நடிக்கவுள்ளனர். அவர்களோடு வைபவ், மஹத் ஆகியோரும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அதிகம் படித்தவை:  சினிமாவை விட்டே விலக முடிவெடுத்தாரா சரவணம் மீனாட்சி புகழ் ரச்சிதா

இந்நிலையில் இன்று நடைபெற்ற பூஜையில் நடிகர் ஜெய் கலந்துகொள்ளவில்லை. முதல் பாகத்தில் கிட்டத்தட்ட ஹீரோவுக்கு சமமான ஒரு ரோலில் நடித்திருந்த இவர், இப்படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்று ரசிகர்களிடம் கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இதுகுறித்து தற்போது டிவிட்டரில் விளக்கமளித்துள்ள ஜெய், ” ஹைதராபாத்தில் ஒரு வேலையில் மாட்டிகொண்டதால் சென்னை 28 பார்ட் 2 பூஜையில் கலந்துகொள்ள முடியவில்லை. பார்ட் 2-விலும் நான் தான் ராக்கர்ஸ் ரகு. தெறிக்க விடுறோம்” என கூறியுள்ளார்