Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெய் நடிக்கும் பிரேக்கிங் நியூஸ் பட போஸ்டர் வெளியானது! ரொமான்ஸ் சொட்ட சொட்ட இருக்கே

விஜய்யின் பகவதி படத்தின் வாயிலாக அறிமுகமானவர் ஜெய், சென்னை 28, வாமனன், சுப்ரமணியபுரம், வடகறி, ராஜா ராணி உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

மனிதரின் சினிமா க்ராப் சென்ற நேரத்தில் காதல் வசப்பட்டார். பின்னர் ஷூட்டிங்கிற்கு தாமதமாக வருகிறார் என சொல்லப்பட்டது. பின்னர் காதல் தோல்வி, குடி பழக்கம் என இவரது சினிமா வாழ்க்கை புதிய வீழ்ச்சியை தொட்டது. சில வருடங்கள் படங்கள் நடிக்காமல் இருந்த ஜெய் மீண்டும் நடிப்பில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.

BREAKING NEWS –  இயக்குநர் ஆண்ட்ரு பாண்டியன் இயக்கத்தில் ஜெய் நடித்துள்ள படம். இப்படத்தில் நடிகை பானுஶ்ரீ நாயகியாக நடிக்கிறார். தேவ் கில், ராகுல் தேவ் வில்லன் வேடங்களில் நடிக்கிறார்கள். ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். திருகடல் உதயம் இப்படத்தினை தயாரித்துள்ளார்.

படத்தின் படப்பிடிப்பை முழுதாக முடித்துவிட்டனர் படக்குழு. போஸ்ட் புரடக்ஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறதாம். அதிக கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதாம். தமிழ் சினிமாவில் இப்படம் ஜெய்க்கு நல்ல பிரேக் த்ரூ தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

jai in breaking news cinemapettai

Continue Reading
To Top