fbpx
Connect with us

Cinemapettai

ஜெய் நடித்துள்ள இந்த படத்திற்கு 1.8 கோடிக்கு விற்பனை.. மிரளும் கோலிவுட்

jai-banner

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெய் நடித்துள்ள இந்த படத்திற்கு 1.8 கோடிக்கு விற்பனை.. மிரளும் கோலிவுட்

அண்மைக்காலமாக ஜெய்க்கு சொல்லிக்கொள்ளும்படியாக பெரிய படங்கள் எதுவும் அமையவில்லை. தன்னுடைய இருப்பை தக்கவைக்க கடுமையாக போராடி வருகிறார். இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் இயக்கும் ‛பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் ஜெய் நடித்துள்ளார்.

பானுஶ்ரீ கதாநாயகியாக நடித்துள்ளர்கள் இந்த படத்தில் அஜித்தின் வேதாளம் படத்தின் வில்லன் ராகுல் தேவ். சுறா படத்தின் வில்லன் தேவ் கில் ஆகியோர் வில்லன்களாக நடித்துள்ளார்கள்.

சூப்பர் ஹீரோ வகை படமாக உருவாகி வருகிறது. இப்படத்திற்கு, விஷால் பீட்டர் இசையமைக்க, ஜானி லால் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்துக்கு பார்த்த இந்தி தயாரிப்பாளர்களிடயே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

சூப்பர் ஹீரோ கதை என்பதை தாண்டி சிறப்பாக வந்திருப்பதாக சொல்கிறார்கள். இதன் காரணமாக இப்படத்தின் ஹிந்தி உரிமம் ஒரு கோடியே 8 லட்சத்துக்கு விற்கப்பட்டுள்ளது.

இது குறித்து தயாரிப்பாளர் திருக்கடல் உதயம் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில். தயாரிப்பாளராக ஒரு நல்ல படத்தை உருவாக்குவதில் சந்தோஷம்தான்.

அதே நேரம், நம் தமிழ் படங்களுக்கு வட இந்தியாவில் கிடைக்கும் வரவேற்ப பார்த்து ரொம்பவே உற்சாகமாக உள்ளேன். பிரேக்கிங் நியூஸ் ஹிந்தி உரிமம் 1.8 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் விஷுவல் எபெக்ட்ஸ் தன்மையுடன் பிரமாண்டமாக உருவாக்கி உள்ளோட்ம. அனைத்து ரசிகர்களையும் ஈர்க்கும்படியான, பல ஆச்சர்யங்கள் கொண்ட கமர்ஷியல் படமாக உருவாகி உள்ளது.

தற்போது படப்பிடிப்பு முடிந்து, மற்ற பணிகள் நடந்து வருகிறது. பிரேக்கிங் நியூஸ் படத்தை வருகிற மே மாதம் வெளியிட உள்ளோம் என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top