ஹீரோ வராததால் காமெடியனுக்கு வந்த வாய்ப்பு.. பத்தே நிமிடத்தில் ஜெய் பீம் நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்

ஒருவரது வாழ்க்கை எந்த நேரத்தில் எப்படி மாறும் என்பதை கணிக்கவே முடியாது. இப்படித்தான் ஒரு காமெடி காமெடி நடிகருக்கு வெறும் பத்து நிமிஷம் ஹீரோ லேட்டாக வந்ததால் ஹீரோ வாய்ப்பை கிடைத்துவிட்டது. ஜெய் பீம் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் இரண்டு கான்ஸ்டபிள்கள் நடித்திருப்பார்கள்.

அதில் ஹெட் கான்ஸ்டபிளாக நடித்திருக்கும் சூப்பர்குட் சுப்பிரமணி என்பவருக்கு தான் இந்த அதிர்ஷ்டம் கைகூடி வந்திருக்கிறது. சூப்பர்குட் சுப்பிரமணி பல காமெடி படங்களில் நமக்கு நன்கு அறிமுகமானவர். ஆனால் அவர் இப்பொழுதுதான் பல பேருக்குத் தெரிய கூடிய அளவிற்கு வளர்ந்து வருகிறார்.

இவர் ஏற்கனவே காதலும் கடந்து போகும், தொடரி, ரஜினிமுருகன், முண்டாசுப்பட்டி போன்ற படங்களில் பரிச்சயம். தற்போது ஜெய்பீம் படத்தில் முக்கியமான வில்லனாக நடிப்பாரார். தற்போது இவர் நடிக்க சென்ற படம் வெள்ளிமலை.

அந்த படத்தில் ஹீரோ வருவதற்கு பத்து நிமிடங்கள் தாமதமானதால் இவரை ஹீரோவாக அந்த படத்தில் போட்டு இயக்குனரும், தயாரிப்பாளரும் படத்தை ஆரம்பித்து விட்டனர். ஓம் விஜய் இயக்கும் வெள்ளிமலை படத்தில், சூப்பர்குட் சுப்பிரமணி உடன் வீர சுபாஷ் மற்றும் அஞ்சு கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

vellimalai-cinemapettai
vellimalai-cinemapettai

இந்த படம் சித்தரின் தனித்துவத்தையும் அவருடைய உடல் மன வலிமையையும், ஆன்மாவின் நல்ல ஆரோக்கியத்திற்கு அவர்களின் பங்களிப்பைப் போற்றும் ஒரு சமூக அக்கறையுள்ள பொழுதுபோக்கு படமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இப்படத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த அத்தகைய சித்தர் வேடத்தில் சூப்பர்குட் சுப்பிரமணி சித்தராக இந்த படத்தில் நடித்திருக்கிறார்.

மேலும் இந்த படத்தின் முழு கதையும் ஒரு அழகான மலை கிராமத்தில் பின்னணி வைத்தே எடுக்கப்பட்டிருக்கிறது எனவே இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சூப்பர்குட் சுப்பிரமணி ஹீரோவாக கலக்கியிருக்கும் வெள்ளிமலை படத்தின் ட்ரைலர் இதோ!

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்