ஜெய்பீம்க்கு இணையாக டாப் ரேட்டிங்கை பிடித்த மாநாடு.. ஒரே படத்தில் அசுர வளர்ச்சியில் சிம்பு

சிம்பு நடிப்பில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நேற்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியான படம் தான் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்திருந்தார். பல தடைகளை தாண்டி வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

டைம் லூப் அடிப்படையில் உருவாகி உள்ளதாலும், வழக்கமான சிம்புவாக இல்லாமல் மிகவும் அமைதியாகவும், நீண்ட பஞ்ச் டயலாக்குகள் இல்லாமலும் சிம்பு நடித்திருப்பதாலும் ரசிகர்கள் மாநாடு படத்தை அதிகம் விரும்புகிறார்கள். மேலும் நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகம் முழுவதும் மாநாடு படத்தின் வசூல் சுமார் 8 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.

சிம்பு படங்களிலேயே மாநாடு படம் ஒரு புது சாதனையை புரிந்து விட்டது. இதுமட்டுமல்ல பிரபல ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி தளத்தில் மாநாடு படம் அதிக புள்ளிகள் பெற்று டாப் பட்டியலில் இணைந்துள்ளது. இதுவரை சிம்புவின் எந்த ஒரு படத்திற்கும் இப்படி ஒரு அங்கீகாரம் கிடைத்ததில்லை.

அதன்படி பிரபல ரேட்டிங் மற்றும் தகவல் தளமான ஐஎம்டிபி தளத்தில் மாநாடு படத்திற்கு 9.5 ரேட்டிங் புள்ளிகள் கிடைத்துள்ளது. முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படம் 9.5 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ள நிலையில், தற்போது மாநாடு படமும் அதே புள்ளிகளை பெற்று ஜெய் பீம் படத்திற்கு இணையான இடத்தை பிடித்துள்ளது.

உலகளவிலான ஒரு ரேட்டிங் மற்றும் தகவல் தளமாக கருதப்படும் ஐஎம்டிபி தளத்தில் 9.5 புள்ளிகள் பெற்று ஜெய் பீம் மற்றும் மாநாடு படமும், 9.1 புள்ளிகள் சூரரை போற்று படமும் இடம் பிடித்துள்ளது. சமீபகாலமாக இதுபோன்று தமிழ் படங்கள் தொடர்ந்து இந்த தளத்தில் இடம் பிடித்து வருவது தமிழ் படங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக பார்க்கப்படுகிறது.

maanadu-movie
maanadu-movie
Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்