Connect with us
Cinemapettai

Cinemapettai

jai-athulya

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஜெய்யுடன் முத்தக்காட்சிக்கு ஒன்ஸ்மோர் கேட்ட அதுல்யா.. மேடையில் மானத்தை வாங்கிய இயக்குனர்

குடும்ப குத்துவிளக்கு நடிகையாக இருந்த அதுல்யா மாதிரி படத்தில் குண்டக்க மண்டக்க நடித்துள்ளதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகள் என ஹீரோவை படாதபாடுபடுத்தி உள்ளார்.

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் ஜெய் மற்றும் அதுல்யா நடித்த கேப்மாரி திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

அதற்கு காரணம் இவ்வளவு நாளாக இழுத்துப் போர்த்திக் கொண்டு நடித்துக்கொண்டிருந்த அதுல்யா கவர்ச்சி, முத்தக்காட்சி என பின்னி பெடல் எடுத்து உள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா அதுல்யா பற்றி சந்திரசேகர் கூறியது அவரை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.

அதுல்யா தொழில் பக்தியை பற்றி இயக்குனர் நன்றாகத்தான் பேசினார். அதற்கு உதாரணம் சொல்லும்போது, அதுல்யா எந்த அளவு தொழில் பக்தி உள்ளவர் என்றால் படத்தில் ஒரு முத்த காட்சி ஒன்று சரியாக வரவில்லை என ஒன்ஸ்மோர் கேட்டு நடித்துக் கொடுத்தார்.

இதுவே அவர் வளர்வதற்கு சான்று என முக்கியமான விஷயத்தை பொதுமேடையில் உளறியதால் சங்கடத்தில் நெளிந்து உள்ளார். கேப்மாரி திரைப்படம் டிசம்பர் 13ம் தேதி வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top