அட ஆமாங்க நம் ஸ்ரீ தேவி, போனி கபூர் மூத்த  மகள் ஜானவி கபூர் தான் ஹீரோயினாக அறிமுகம் ஆகவிருக்கிறார். இவர் அறிமுகம் ஆக இருப்பது ஹிந்தியில் தான். இந்த தகவலை இயக்குனர் கரண் ஜோகர் தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.

ஜானவி கபூருடன் ஜோடி சேர்பவர் இஷான் காட்டெர், இவர் ஷாஹித் கபூரின் தம்பி ஆவர். இப்படத்திற்கு “தடக்” என்று பெயர் வைத்துள்ளார். ஷஷாங்க் கைதான் படத்தின் இயக்குனர். இப்படம் ஜூலை 6 , 2018 இல் ரிலீஸ் ஆகிறது. கரண் ஜோஹரின் தர்மா ப்ரோடுக்ஷன்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின் மூன்று போஸ்டர்களை கரண் வெளியிட்டார்.

அதிகம் படித்தவை:  டிசம்பர் 29 ரிலீசாகிறது பிரபு தேவாவின் 'களவாடிய பொழுதுகள்' !

அழகிய தோற்றம், போட்டோஜெனிக் என்று ஸ்டைலிஷாக தான் உள்ளார்  ஜானவி. எனினும் நடிப்பை பொறுத்தவரை, படம் வெளிவந்தால் தான் தெரியும்.

அதிகம் படித்தவை:  கையடக்க கருவி மூலம் பெட்ரோல் பங்க்குகளில் பெரும் மோசடி - மக்களே உஷார்!

ஜானவியின் இன்ஸ்டாகிராம் பக்கம் இதோ ..

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor) on

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

மீன் குட்டிக்கு நீந்தவா கத்து தரணும். விரைவில் தமிழ், தெலுங்கு என்று இந்தப்பக்கமும் வாங்க ஜானவி.